பயனர்:தனுஷான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் கோவில் தாவடி[தொகு]

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன் துறை  நெடுஞ்சாலை வழியால் தாவடி சந்திவரை சென்று அங்கிருந்து சுதுமலை செல்லும் பாதையால் 100 யார் சென்றால் தாவடி ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் ஆலயத்தை அடையலாம்.

இவ்வாலயம் ஆரம்பித்த ஆண்டு தெரியவில்லை 1855 ஆம் ஆண்டு தொடக்கம் இவ் ஆலயம் வேளாள பெருமகன் குமாரவேல் இராச காரியரால் நிர்வகிக்கப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது.

மண்சுவர் கொண்டு கட்டப்பட்ட இவ் ஆலயத்தை கற்கோவிலாக   காட்டியவர் குமாரவேலர் இராசகரியர்.

இவ் ஆலயம் இருந்த நிலமும் அதைசூழ்ந்த பிரகாரத்துடன் கூடிய இரண்டு பரப்பு காணியும் கோவிலுக்கு தருமசாஸனம் செய்யப்பட்டது.

ஏழரைக்கால் பரப்பு நிலமும் கோவில் பாவனைக்கு விடப்பட்ட்து

1847 ஆம் ஆண்டு தொடக்கம் 1855 ஆம் ஆண்டு வரை  இவ் ஆலயம்

குமாரவேல் இராச காரியரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது 1894 ஆம் ஆண்டில் அவர் மகன்  இராசகரியர்  நமசிவாயம்   பிள்ளையிடம் ஒப்படைக்கப்  பட்டது.

அவரும் 1908 ஆம் ஆண்டு வரை இவ் ஆலயத்தை பரிபாலித்து வந்தார்.

1908 ஆம் ஆண்டு முதல் நமசிவாயப்பிள்ளையின் சகோதரியான

தாவடி குடி பரமு சதாசிவம் பெண் சிவக்கொழுந்துவும் அவர் பிள்ளைகள் சதாசிவம் சோமசுந்தரமும்  சதாசிவ  ஆறுமுகமும் நிர்வகித்து வந்தார்கள்.

இவ்  ஆலயத்தின் வளர்ச்சியை கண்ணுறும் போது 1862 ஆம் ஆண்டிலிருந்து ஆலயத்தை சுற்றி அரைசுவர் எழுப்பப் பட்டதுடன்  கோவில் வாயிலுக்கு கிராதிக்கேட் அமைத்ததுடன் வாசலில் ஓலை குட்டானுக்குள் வீபூதி போட்டு அனைவருக்கும் கிடைக்க கூடியதாக அமைத்துள்ளார்கள். கோவிலை நிர்வகிப்போராகிய குமாரவேலர் இராசகரியர் பரம்பரையினரிடமே ஆலய திறப்பு இருந்துள்ளது.பூசகர்  அவர்களிடமே திறப்பு பெற்று பூசை வழிபாடுகளை நடாத்தி வந்துள்ளார். இவ் ஆலயத்தின் வரலாற்றின் திருப்பு முனை இடம்பெற்றது 1932 ஆம் ஆண்டில்தான்.


1932 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 25 ம் திகதி பொதுமக்கள் ஒன்று கூடி ஒரு சபையை ஏற்படுத்தினார்கள். அதில் அப்பாத்துரை குருக்கள் கணேஷாக்குருக்கள் சுப்பிரமணியம் கந்தையா வே. தம்பிப்பிள்ளை கந்தையா ஐயாக்குட்டி கந்தையா தம்பி ராசா நடராசா என்ற ஐவரை கொண்ட தர்மகர்த்தா சபை அமைக்கப்பட்ட்துடன் கோவில் பொதுக்கோவில் ஆகியது. இதன் பின் பர்மா (தற்போதையமியன்மார்) விலிருந்து தேக்கு மரங்களை கடல் மார்க்கமாக கொண்டுவந்து திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. நடராசர் விக்கிரகம் நவக்கிரகங்கள் சண்டேஸ்வரர் விக்கிரகங்கள் பிரதிஷடை செய்யப்பட்டு 25.08.1944 இல் மாகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின் தர்மகர்தாக்கள் அமரர் ஆகிய காரணத்தினால் நிர்வாகம் செயலிழந்த காரணத்தினால் புனரமைக்க விரும்பினார். அதுவும் காலதாமதமாகி 1966 வரை நடைமுறை படுத்த இயலாது இருந்தது.

இதன் பின் 1977 இல் நிர்வாகம் புனரமைக்கப்பட்டு 37 பேரை கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட்துடன் நம்பிக்கை பொறுப்பாளர்களாக திரு.முத்துவேல்பிள்ளை மதியாபரனும் சிவஸ்ரீ அப்பாத்துரை குருக்கள் கணேசக் குருக்கள் சுப்பையா ராமலிங்கம் கார்த்திகேசர் ரசாரத்தினம் செல்லத்துரை அன்னலிங்கம் ஆகியோரை தெரிவு செய்தார்கள்.

இவர்களின் காலங்களில் ஆலயம் பல வழிகளிலும் முன்னேற்றம் கண்டது. இந்தியாவில் தஞ்சாவூரை சார்ந்த திரு பன்னீர் செல்வம் குழுவினரை வரவழைத்து இராஜ கோபுரம் அமைத்து 06.02.1980 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மணிமண்டபம் அமைத்துள்ளார்கள். இவர்களின் காலத்திலேயே பஞ்சமுக விநாயகர் நால்வர் தாமிர விக்கிரகங்கள் பிரதிஷடை செய்யப்பட்டன. ஆலய வளர்ச்சியை கருத்தில் கொண்டு உபாயக்காரர் மகா சபையை அடித்தளமாக கொண்டு பதினொருவர் கொண்ட பரிபாலன சபை 14.03.1999 இல் அமைக்கப்பட்டது.

இவ் ஆலயத்தில் 70 வருடங்களாக நடைபெற்று வந்த மகோற்சவங்களில் பட்ஷ மாற்றங்கள் ஏற்படடன. அமரகளான பிரம்மஸ்ரீ அ. கணேசக்குருக்கள் அ.முத்துஸ்வாமி குருக்கள் ஊர்மக்கள் உதவியுடன் 1932 இல் மகோற்சவ வத்தை நடாத்தி வந்தார்கள். அக்காலத்தில் வைகாசி பூரணையைத் தீர்த்த உற்ஸவமாக கொண்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெற்று வந்தது இவ் மகோற்ஸவங்களை திருகோணமலை பிரம்மஸ்ரீ இ.கு.பூர்ணாந்தேசுவரக்குருக்கள் பத்ததி வழிமுறையில் நடாத்தி வந்தார்.இன்றும் இப்பத்ததி முறைப்படியே மகோற்ஸவம் நடைபெறுகின்றது.06.02.1980 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின் சித்திரை வருடப்பிறப்பில் தேர்த்திருவிழா வரும் வண்ணம் 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது.

மகோற்ஸவத்திருவிழா[தொகு]

இதன் பின் 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக தின் பின் 18 நாட்கள் மகோற்ஸவத்திருவிழாவாக மற்றம் செய்யப்பட்டது. இதுவும் வருடப்பிறப்பு அன்றே தேர் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டது. இவ் ஆலயத்தில் 18 நாட்கள் திருவிழா நடைபெறும் பொது முதல் 5 நாட்களும் மூஷிகம் காராம்பசு இடபம் போன்ற வாகனங்களில் விநாயகர் எழுந்தருளுவார். 6 ம் நாள் கைலாச வாகனத்திலும் 7 ம் நாள் சயன உற்ஸவமாகவும் 8ம் நாள் பூச்சொரியும் உற்ஸவமாகவும் 9ம் நாள் பட்டுக்குடை திருவிழாவா கவும் 10 ம் நாள் மஞ்சமும் 11 ம் நாள் வேதபாராயண உற்ஸவமும் 12 ம் நாள் வசந்த உற்ஸவமும் 13 ம் நாள் நாயன்மார்களின் உற்ஸவமாகவும் 14 ம் நாள் தைலாபியமும் 15 ம் நாள் வேட்டை திருவிழாவும் 16 ம் நாள் சப்பறம் 17ம் நாள் தேரும் 18 ம் நாள் தீர்த்தமும் நடைபெறும். மகோற்ஸவ வெளி உலாவில் விநாயகருடன் முருகனும் வீதிஉலா வருவார்கள். இவ் ஆலயத்தில் மூன்று கால பூசைகளும் நடைபெறும். சித்திரைவருட பிறப்பு அன்று தேர் ஓடும்.

விசேட தினங்களாக வெள்ளிக்கிழமை உற்ஸவம் சங்கட கார சதுர்த்தி உற்ஸவம் பிள்ளையார் விரத நாட்களில் இலட்ச்சார்ச்சனையுடன் ஹோமமும் நடைபெறும் மேலும் விநாயகர் விரதங்கள் ,கந்தசஷ்டி சிவராத்திரி நவராத்திரி திருவெம்பாவை திருக்கார்த்திகை என்பனவும் நடைபெறுகின்றன. புராண படனம் தற்போதும் நடைபெறுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தனுஷான்&oldid=2180385" இலிருந்து மீள்விக்கப்பட்டது