பயனர்:ஜெ. அப்துர்ரஹ்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உவரி எழிலன் ..............................

பண்பலை வானொலிகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் சூப்பர் சிங்கர் போட்டிகள் . கேட்டிருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள். ஆனால் வாட்ஸ்அப்பில் சூப்பர் சிங்கர் போட்டிகள் நடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்னது வாட்ஸ்அப்பில் சூப்பர் சிங்கரா என்று நீங்கள் வாயைப் பிளப்பது தெரிகிறது. ஆமாம் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் உவரி எழிலன்.


தற்போது திருச்சியில் வசிக்கும் உவரி எழிலன் திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்தவர். இசைக்கடல் என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்று நடத்துகிறார். வெறும் இசை சம்பந்தமான பதிவுகள் மட்டுமே இந்த குரூப்பில் பகிரலாம். அங்கத்தினர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாட்டுப்பாடி குரூப்பில் பகிர்ந்து கொள்ளலாம். வேறு பகிர்வுகளுக்கு அனுமதியில்லை.


சூப்பர் சிங்கர் என்ற பெயரில் ஐந்து வாரப் போட்டி ஒன்றை இந்த குரூப்பில் நடத்துகிறார் உவரி எழிலன். வாரா வாரம் குறிப்பிடப்படும் நடிகரின் பாடல்கள் இரண்டை தினமும் போட்டியாளர்கள் பாடவேண்டும். ஒவ்வொரு வாரமும் பாடுவோரின் திறமைக்கேற்ப நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்குவார்கள். ஐந்தாவது வார முடிவில் குரூப் அங்கத்தினர்களும் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க, கடைசியில் நடுவர்களின் மதிப்பெண்களும், அங்கத்தினர்களின் வாக்குகளும் சேர்த்து மதிப்பிடப்பட்டு அந்த சீசனின் சூப்பர் சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

அவரிடம் எப்படி உங்களுக்கு வாட்ஸ்அப்பில் சூப்பர் சிங்கர் போட்டி நடத்தும் ஐடியா வந்தது? என்றோம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு பாடல்கள்னா ரொம்ப இஷ்டம்.  சந்திரபாபு ஐயாவின் தீவிரமான ரசிகன் நான். சினிமா பாட்டுகள் மட்டுமில்லை. எல்லா மதத்து ஆன்மீகப் பாடல்களையும் விரும்பிக் கேட்பேன். இசைக்கென்று ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்த எனக்கு அதிலேயே சூப்பர் சிங்கர் போட்டிகளை நடத்தினால் என்ன என்று தோன்றியது. இதோ இரண்டு போட்டிகள் முடிந்து மூன்றாவது போட்டி நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்தியாவிலிருந்து மட்டுமலல வெளிநாட்டிலிருந்தும்  போட்டியாளர்கள் பாடுகிறார்கள்" என்று சிரித்தார்.


உவரி எழிலனோடு அப்துல் ஜப்பார், சூசை ராயப்பன், ப்ளோரிடா என்று மூன்று நடுவர்கள் இசைக் கடலின் சூப்பர் சிங்கர் போட்டியை வழிநடத்துகிறார்கள். இதற்கு விளம்பரதாரர்களும் உண்டு என்பது அடுத்த ஆச்சரியம்.


வணக்கம் அன்பு நெஞ்சங்களே இது ஆசியாவின் நம்பர் ஒன் பெயிண்ட் நிப்பான் பெயிண்ட் வழங்கும் இசைக்கடலின் சூப்பர் சிங்கர் சீசன் 2. இந்நிகழ்ச்சியை உங்களுக்கு இணைந்து வழங்குபவர்கள் உங்கள் ஆரோக்கியம் எங்கள் லட்சியம் ஆச்சி மசாலா, உவரி உதயா ஹோட்டல், திசையன்விளை தங்கையா விலாஸ் மிட்டாய்கடை என கணீரென ஒலிக்கின்ற உவரி எழிலனின் குரலைக் கேட்கையில் உவரி எழிலன் பண்பலை வானொலிகளுக்கோ, தொலைக்காட்சி சேனல்களுக்கோ மிகப் பொருத்தமானவர் என்பது தெரிகிறது.


இசைக் கடலில் சங்கமிக்கவும், சூப்பர் சிங்கர் போட்டிகளில் கலந்து கொள்ளவும் விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் உவரி எழிலனை. கைபேசி எண் 9790111273

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஜெ._அப்துர்ரஹ்மான்&oldid=2423785" இலிருந்து மீள்விக்கப்பட்டது