உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:சிவாஜிகபிலன் நாகமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறப்பு; சிவாஜிகபிலன் நாகமுத்து ,தமிழ்நாடு,நாகப்பட்டினம் மாவட்டம்,மயிலாடுதுறை வட்டம் ,மூவலூர் ஊராட்சிக்குட்பட்ட மகாதானபுரம் எனும் சிற்றூரில் பள்ளிக்கூடத்தெருவில் க.நாகமுத்து-சின்னப்பிள்ளை இணையரின் கடைசி மகனாக 07-01-1966 அன்று பிறந்தார். கல்வி; ஆரம்பக்கல்வியை உள்ளூரிலிருந்த தொடக்கப் பள்ளியிலும்,இடைநிலைக்கல்வியை மூவலூர் நடுநிலைப் பள்ளியிலும்,மேல்நிலைக் கல்வியை மயிலாடுதுறை ,கூறைநாடு நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.பின்னர் திருச்சி ஈ.வெ.ரா அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தமிழும்,திருச்சி தேசியக் கல்லூரியில் முதுகலைத் தமிழும்,இளமுனைவர் பட்டமும் பெற்றார்.இளம் கல்வியியல் கல்வியைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகக் கல்லூரியிலும்,முனைவர் பட்ட ஆய்வினை தஞ்சாவூர்,பூண்டி அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியிலும் மேற்கொண்ட இவர் ,திருச்சி ,பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். ஆர்வம்,திறமை: கதை,கவிதை,நாடகம்,நடனம்,இசை,மேடைப்பேச்சு,ஓவியம், புகைப்படம், நடிப்பு,இயக்கம் அழகிய கையெழுத்துப்பயிற்சி, எனப் பல்வகைக் கலைகளில் ஆர்வமும்,பயிற்சியும் உடையவர்.திருச்சியில் படித்த போது தூரிகை எனும் பெயரில் ஓவியக்கூடம் நிறுவி,அதன் வருவாயில் தம் படிப்பைத் தொடர்ந்தார். பணி; முதன் முதலில் தாம் பயின்ற தேசியக்கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியப் பணியில் தம் வாழ்வைத் தொடங்கியவர்,பின்னர் நாமக்கல் .கீரம்பூர்,கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகவும்,பொறுப்பு முதல்வராகவும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினார்.பின்னர் நாமக்கல் மாருதி மெட்ரிக் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராக மூன்று மாதங்கள் பணியாற்றி, நிறைவாக ,தஞ்சாவூர்,பூண்டி அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியில்1998 ஆம் ஆண்டு விரிவுரையாளராக நிரந்தரப் பணியில் சேர்ந்து, தமிழ் உயராய்வு மையத்தில் இணைப் பேராசிரியராக இன்றும் பணியாற்றி வருகிறார். பொதுப்பணிகள்: பள்ளி,கல்லூரிகள்,பொதுநிகழ்ச்சிகள் போன்றவற்றில் சொற்பொழிவும்,திருச்சி வானொலியில் 1983 முதல் இதுவரையிலும் முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும்,தஞ்சாவூர் ஷாலினி, கியூ,ஜென்,கரண்,டிசியு,நியூ போன்ற தொலைக்காட்சிகளில் பொதுவிவாத நிகழ்ச்சியான டெலி அரங்கம், கவிதை, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளார்.மேலும்,பல கல்லூரிகளில் பயிலும் ,முதுகலை சமூகப்பணி மாணவர்களுடன் இணைந்து பல ஊர்களில் மது அடிமைகள்,சந்தேகம் எனும் மனப்பிணி,ஆளுமை மேம்பாட்டுத்திறன், போன்ற பலதலைப்புகளில் இருபதுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார். விருதுகள்;

நாமக்கல் .கீரம்பூர்,கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்தமையைப் பாராட்டி நிர்வாகத்தால் ரூபாய் 1001/ பணமுடிப்பு பெற்றார்.1996 ஆம் ஆண்டில் ஈரோடு,சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்திய ஆசிரியர் தின விழாப்போட்டிகளில் பங்கேற்று அதிகபட்ச புள்ளிகளைப் பெற்று முதல் நிலையில் பஞ்ச ரத்னா விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் எழுத்தாளர் பொன்னீலன் அவர்களால் வழங்கப்பட்டது.

இசை;

நாமக்கல் .கீரம்பூர்,கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய போது நாமக்கல் திரு ,குருமூவீஸ் மணி அவர்கள் வெளியிட்ட நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா எனும் ஒலிநாடாவில் திரு டி.எல்.மகாராஜன் அவர்கள் பாடிய ஆஞ்சநேயனே,இராமதூதனே எனும் பாடலையும், திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரா எனும் ஒலிநாடாவில் கோவை கமலா அவர்கள் பாடிய திருச்செங்கோடு மலையில் அமர்ந்தவனே எனும்   பாடலையும் எழுதியுள்ளார் .பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றில் தாமே பாடல்கள் இயற்றி, மெட்டமைத்து மாணவ , மாணவிகளால் பாடப்பட்ட பாடல்கள் பல திருச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.

ஓவியம்;

ஒவியம் இவரது கைத்தொழில்.ஒவியமே இவரது உயிர்நாடி.இவர் யாரிடமும் ஓவியம் பயின்றதில்லை.சுவர் விளம்பரங்கள்,பலகை விளம்பரங்கள்,பதாதைகள்,ஸ்கிரீன்பிரிண்டிங்,போன்றவற்றின் மூலம் கிடைத்த வருவாயில் தம் கல்வித் தகுதியை வளர்த்துக்கொண்டவர்.புத்தக அட்டைப்படங்கள், இறந்தோர் ஓவியங்கள்,ஒரு மாதம், 15 நாட்கள்,ஒரு நாள்  எனும் எண்ணிக்கைகளில் அழகான தமிழ் ஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி மூலம் இதுவரையிலும் ஆயிரக்கனக்கானோர் கடந்த 18 ஆண்டுகளில்பயிற்சி பெற்றுள்ளனர்.

நூல்கள்; 1.அந்தியில் பூத்த பூபாளம்- கவிதைத் தொகுதி, 2.புலவர் சூ தாமசுப் புலவரின் ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் - பன்முகப்பார்வை -பதிப்பாசிரியர் 3.தஞ்சை நாட்டுப்புறக் கலைகள் -களப்பணி ஆய்வு நூல் 4.உளவியல் நோக்கில் கண்ணதாசன் நாவல்கள் - முனைவர் பட்ட ஆய்வு நூல்(அச்சில்) 5.இல்லறம் .நல்லறம் - சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு 6.தமிழிலக்கிய வினா- விடை -அகரவரிசையில் 1000 -( அகர வரிசையில் வெளியிடப்பட்ட முதல் நூல்) 7.உளவியல் களஞ்சியம் - தொகுப்பணியில் உள்ளது