பயனர்:இளங்குமரன்
Appearance
இளங்குமரன்
[தொகு]உண்மையான கல்வியைக் கற்பிப்பது, உலகத்தின் உன்னதத் தொழிலாம் உழவுத் தொழிலை, வேளாண்மையைப் போற்றுவது, அதனை ஆதாரமாகக் கொண்டு, அதன்வழி மனிதத்தை வளர்ப்பது, மனிதத்தைப் போற்றச் செய்வது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது. இவையே எனது எழுத்தேணி அறக்கட்டளையின் குறிக்கோளாகும்
அறக்கட்டளையின் தொடக்கம்
[தொகு]1998 ஆம் ஆண்டு என் சிந்தனையில் கல்வியின் மூலமாக சமுதாய முன்னேற்றம் என்ற கருத்தாக்கத்தில் எழுத்தை ஏணியாகக் கொண்டு முன்னேறுவது; முன்னேற்றுவது என்ற தத்துவத்தில் எழுத்தேணி அறக்கட்டளை தஞ்சையில் உதயமானது. 1998 டிசம்பர் 15 இல் சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை தொடங்கும்போது என் தன்னம்பிக்கை மட்டுமே என்னுடைய சொத்தாக அறக்கட்டளையின் சொத்தாக இருந்தது.
இளங்குமரன் 05:28, 4 செப்டெம்பர் 2010 (UTC)