உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:அ.உமர் பாரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமர்

என்னுடைய முதன்மையான தேடுதல் தளமாக அறிமுகமானது விக்கி பீடியா. ஒரு வாசகனாக, எழுத்தாளனாக தேவைப்படும் தரவுகளை தேடுகிற போது விக்கி பீடியா 2010 இல் இருந்து பயன்படத்துவங்கியது. விக்கி பீடியாவில் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது தமிழ் இணையக் கல்விக் கழகம் தான். மருத்துவம் தொடர்பான ஒரு கலைக்களஞ்சிய உருவாக்கப் பணிக்கான பயிற்சி முகாமில் பேராசிரியர் தமிழ்ப் பரிதி தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் விக்கி பீடியாவில் எழுதுவது குறித்து விளக்கினார். தேனி மாவட்ட எழுத்தாளர்கள் குறித்து எழுதத் துவங்கியிருக்கிறேன்.

கல்வித்தகுதி : அக்குபங்சர் மருத்துவத்தில் முதுநிலைபட்டம் பணி - அக்குபங்சர் மருத்துவர்

வகிக்கும் பொறுப்புகள் - முதல்வர், கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் கல்வி நிறுவனம் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் அக்குபங்சர் பாடத்திட்டக் குழு உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறேன்.

ஆறு கவிதை நூல்களும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு நாவலும் தமிழ் இலக்கியத்தில் எனது பங்களிப்புகள். மருத்துவக் கட்டுரைகள் இருபத்தி இரண்டு நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:அ.உமர்_பாரூக்&oldid=1977341" இலிருந்து மீள்விக்கப்பட்டது