2,2,3,3-டெட்ராமெத்தில்சக்சினிக் அமிலம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,2,3,3-டெட்ராமெத்தில்பியூட்டேன்-1,4-டையாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
2,2,3,3-டெட்ராமெத்தில்பியூட்டேன்-1,4-டையாயிக் அமிலம் ; 2,2,3,3-2,2,3,3-டெட்ராமெத்தில்சக்சினிக் அமிலம்; டெட்ராமெத்தில் சக்சினிக் அமிலம்; டெட்ராமெத்தில்பியூட்டேன்டையாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
630-51-3 | |
InChI
| |
பண்புகள் | |
C8H14O4 | |
வாய்ப்பாட்டு எடை | 174.19400,[1] 174.19436 [2] |
அடர்த்தி | 1.161 கி/செ.மீ3 [1] |
உருகுநிலை | 204–206 °C (399–403 °F; 477–479 K) [1] |
கொதிநிலை | 259.6 °C (499.3 °F; 532.8 K) 760 மிமீபாதரசம் [1] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.474 [1] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 125.1 °C (257.2 °F; 398.2 K) [1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,2,3,3-டெட்ராமெத்தில்சக்சினிக் அமிலம் (2,2,3,3-tetramethylsuccinic acid) என்பது C8H14O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். HOOC-C(CH3)2-C(CH3)2-COOH என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இதைக் குறிப்பிடலாம். டைகார்பாக்சிலிக் அமிலம் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தை 2,2,3,3-டெட்ராமெத்தில்பியூட்டேன்-1,4-டையாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம்[1][2].
சக்சினிக் அமிலத்தினுடைய (பியூட்டேன்-1,4-டையாயிக் அமிலம்) வழிப்பெறுதியாக இச்சேர்ம்ம் பார்க்கப்படுகிறது. சக்சினிக் அமிலத்தின் அமைப்புச் சங்கிலியிலுள்ள ஒவ்வொரு மையக் கார்பன் அணுவிலும் இருக்கின்ற இரண்டு ஐதரசன் அணுக்கள், இரண்டு மெத்தில் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு 2,2,3,3-டெட்ராமெத்தில்சக்சினிக் அமிலக் கட்டமைப்பு உருவாகிறது[1]
தயாரிப்பு
[தொகு]2,2,3,3-டெட்ராமெத்தில்-4-ஒன்-குளுட்டாரிக் அமிலத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி 2,2,3,3-டெட்ராமெத்தில்சக்சினிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கார்பனோராக்சைடு மூலக்கூறு இவ்வினையில் வெளியாகிறது[3].
இச்சேர்மத்தை சூடாக்கினால் 3,3,4,4-டெட்ராமெத்தில்டெட்ராஐதரோபியூரான்-2,5-டையோன் என்ற பல்லினவளைய நீரிலி உருவாகிறது. இவ்வினையில் ஒரு நீர் மூலக்கூறு இழக்கப்படுகிறது[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 " 2,2,3,3-tetramethylbutanedioic acid" at Molbase. Accessed on 2015-08-031.
- ↑ 2.0 2.1 2,2,3,3-tetramethylsuccinic acid at the ChemBook site. Accessed on 2015-08-03.
- ↑ Francis Francis and Francis George Willson (1913), Some derivatives of phorone. Part I. Journal of the Chemical Society, Transactions (UK), volume 103, article CCXXXIII, pages 2238-2247. எஆசு:10.1039/CT9130302238
- ↑ Eugene Rothstein, Charles William Shoppee (1927), Ring-chain tautomerism. Part XV. The hydroxy-lactone type. Journal of the Chemical Society (UK; Resumed), article LXXVIII, pages 531-534. எஆசு:10.1039/JR9270000531.