16 ஆம் நூற்றாண்டு தமிழ்நூற் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் பல புலவர்கள் தோன்றிப் பலநூல்களை இயற்றியுள்ளனர். அவர்கள் அனைவரையும், அவர்கள் இயற்றிய அனைத்து நூல்களையும் உடன்காலப் புலவர்களோடு இணைத்துக் காணும் வகையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கியப் பாதையை வரலாற்றுக் கோணத்தில் பார்க்க விரும்பும் ஆய்வாளர்களுக்கு இது உதவியாக அமையும்.[1] 16ம் நூற்றாண்டு தமிழ் நூல் உருவாக்கத்தில் ஒரு முக்கிய திருப்புமுனைக் காலப் பகுதி ஆகும். இக் காலத்திலேயே தமிழ் முதல் முதலாக அச்சேறியது. எனினும் பெரும்பான்மைத் தமிழ் சாசனங்களும், நூல்களும் சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலுமே எழுதப்படன.

முக்கிய படைப்புகள்[தொகு]

புலவர் பெயர் - உயிரெழுத்து வரிசை அ[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
அகத்தியர் - சித்தர் அகத்தியர் ஞானம் முதலியன - 1550 1600
அதிவீர ராம பாண்டியர் நைடதம், புராணங்கள் கவிராச பிள்ளை சிதம்பரநாத கவி 1550 - 1600
அம்பிகாபதி, வீரை நெல்லை வருக்கக் கோவை கவிராச பண்டிதரின் புதல்வர் 1550 - 1575
அரதாசர் இருசமய விளக்கம் கிருஷ்ணதேவ ராயர் 1550 - 1525
அருளான தாசர் பாகவதம் - 1525 - 1550
அனகைச் சம்பந்த முதலியார் திருவாரூர்ப் புராணம் நிரம்ப அழகிய தேசிகர் 1575 - 1600
அனதாரியப்பர் சுந்தர பாண்டியம் திருவிர,உந்தான் 1575 - 1600

புலவர் பெயர் - உயிரெழுத்து வரிசை ஆ உ எ ஐ[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
ஆனந்தக் கூத்தர் திருக்காளத்திப் புராணம் கமலை ஞானப்பிரகாசர் 1575 - 1600
உலகநாத முனிவர் உலகநீதி கமலை ஞானப்பிரகாசர் 1525 - 1550
எல்லப்ப நாவலர், சைவ அருணாசல புராணம் கவிராச பிள்ளை 1535 - 1575
ஐயம்பெருமாள் புரூரவ சரிதை அதிவீர ராமர் 1575 - 1600

புலவர் பெயர் - க கா வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
கருவூர்ச் சித்தர் கருவூரார் பூசாவிதி - 1575 - 1600
கவிராச பண்டிதர், வீரை சௌந்தர்ய லகரி எல்லப்ப நாவலர் 1530 - 1560
கவிராச பிள்ளை, சேறை திருக்காளத்தி நாதர் உலா அதிவீர ராமர் 1550 - 1600
காரி ரத்தினக் கவிராயர் மாறனலங்கார உரை திருக்குருகைப் பெருமாள் 1550 - 1575
காக புருடர் குறள் - 1550 - 1575
காசிக் கலியன் கவிராயர் மாறனலங்கார உரை அதிவீர ராம பாண்டியர் 1575 - 1600

புலவர் பெயர் - கு கூ கொ வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
குமார சரசுவதி - கிருஷ்ணதேவ ராயர் 1525 - 1550
குமார சுவாமி அவதானி தெய்வச்சிலையார் விறலிவிடு தூது தெய்ஃவச்சிலைப் பெருமான் 1550 - 1575
குகை நமசிவாயர் அருணகிரி அந்தாதி குரு நமசிவாயரின் குரு 1550 - 1575
குருஞான சம்பந்தர் சிவபோக சாரம் கமலை ஞானப்பிரகாசரின் சீடர் 1550 - 1575
குருநமசிவாயர் அருணகிரி அந்தாதி குருநமசிவாயரின் குரு 1550 - 1575
கூடற்புராண ஆசிரியர் கூடற்புராணம் - 1590 - 1600
கொங்கண சித்தர் வாலைக் கும்மி - 1550 - 1575

புலவர் பெயர் - ச வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
சட்டைமுனி கயிலாய சித்தர் திருமந்திர உரை, சித்தர் பாடல்கள் - -
சிதம்பரநாத கவி சங்கர விலாசம் அதிவீர ராமர் 1575 - 1600
சவாக்கிர யோகிகள் சிவநெறிப் பிரகாசம் சேவப்ப நாய்க்கன் 1550 - 1575
செவ்வைச் சூடுவார் பாகவதம் - 1550 - 1575

புலவர் பெயர் - ஞ வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
ஞானக்கூத்தர் திருவையாற்றுப் புராணம் நிரம்ப அழகிய தேசிகர் 1575 - 1600
ஞானப்பிரகாசர், அண்ணாமலை சிவஞான சித்தியார் பரபக்க உரை - 1550 - 1600
ஞானப்பிரகாசர், கச்சி தனிப்பாடல் திருமலைநாதர் பரஞ்சோதி 1550 - 1600
ஞானப்பிரகாசர், கமலை மழபாடிப் புராணம் குருஞான சம்பந்தரின் குரு 1530 - 1575
ஞானப்பிரகாசர், செட்டித்தெரு - கமலை சானப்பிரகாசரின் குரு 1500 - 1525
ஞானப்பிரகாசர், திருவொற்றியூர் சிவஞான சித்தியார் பரபக்க உரை திருவொற்றியூர் ஞானப்பிரகாசரின் குரு 1550 - 1575
ஞானாமிர்த உரையாசிரியர் ஞானாமிர்த உரை - 1575 - 1600

புலவர் பெயர் - த வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
தத்துவப் பிரகாசர், திருஆரூர் தனிப்பாடல் கிருஷ்ணதேவ ராயர் 1520 -1550
தத்துவப் பிரகாசர், திருஒற்றியூர் சிவஞான சித்தியார் பரபக்க உரை திருவொற்றியூர் ஞானப்பிரகாசரின் சீடர் 1550 - 1600
திருக்குருகைப் பெருமாள் மாறனலங்காரம் - 1530 - 1560
திருத்தோணியப்பர் - ஆரூர்த் தத்துவப் பிரகாசர் 1525 - 1550
திருமூல சித்தர் திருமூல சித்தர் ஞானம் - 1525 - 1550
திருமலை நாதர் சிதம்பர புராணம் மச்சி ஞானப்பிரகாசர் 1525 - 1550
திருக்களிற்றுப்படியார் பொழிப்புரை ஆசிரியர் திருக்களிற்றுப்படியார் பொழிப்புரை 1575 - 1600
தினகர வெண்பா ஆசிரியர் (நாகராசன்) தினகர வெண்பா - 1575 - 1600
தையூர் உத்தண்டன் கோவை ஆசிரியர் தையூர் உத்தண்டன் கோவை தினகரன் 1575 - 1600

புலவர் பெயர் - ந வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
நந்தி சிவாக்கிர யோகி சிவநெறிப் பிரகாச உரை சிவாக்கிர யோகி 1575 -1600
நாககுமார காவிய ஆசிரியர் நாககுமார காவியம் - 1550 - 1575
நிரம்ப அழகிய தேசிகர் சேது புராணம் கமலை ஞானப்பிரகாசரின் சீடர் 1500 -1575
நீதி வெண்பா ஆசிரியர் நீதி வெண்பா - 1575 - 1600

புலவர் பெயர் - ப வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
பரகால நல்லான் ரகஸ்யத்ரையம் - 1575 -1600
பரஞ்சோதி சிதம்பரப் பாட்டியல் கச்சி ஞானப்பிரகாசர் 2 1520 -1545
பிள்ளை லோகஞ் சீயர் இராமானுசார்ய திவ்விய சரிதை - 1525 - 1550
பழனிக்கோவை ஆசிரியர் பழனிக்கோவை - 1500 - 15215

புலவர் பெயர் - ம, ர வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
மண்டல புருடர் சூடாமணி நிகண்டு கிருஷ்ணதேவராயர் 1500 -1550
மறைஞான சம்பந்தர் சிவதருமோத்திரம், சைவ சமய நெறி - 1550 - 1560
மறைஞான தேசிகர் சிலஞான சித்தியார் பரபக்க உரை மறைஞான சம்பந்தரின் சீடர் 1550 - 1575
மூவர் அம்மானை ஆசிரியர் மூவர் அம்மானை - 1550 - 1575
ரேவண சித்தர் அகராதி நிகண்டு - 1575 - 1600

புலவர் பெயர் - வ வரிசை[தொகு]

புலவர் பெயர் நூல் உடன் காலத்தவர் புலவர் காலம்
வரகுண ராம பாண்டியர் இலிங்க புராணம், வாயு சங்கிதை அதிவீர ராமர் முதலானோர் 1550 1590
வரதுங்க ராம பாண்டியர் பிரமோத்தர காண்டம் அதிவீர ராமர் முதலானோர் 1550 - 1590
வலிவல மும்மணிக்கோவை ஆசிரியர் வலிவல மும்மணிக்கோவை 1500 - 1525
வீரன் ஆக கவிராயன் அரிச்சந்திர புராணம் அதிவீர ராமர் 1500 - 1525

அச்சிடப்பட்ட தமிழ் நூல்கள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு - 16 ஆம் நூற்றாண்டு - பாகம் 3 - பக்கம் 320 முதல் 323