வினய் பதக்
வினய் பதக் | |
---|---|
![]() | |
தொழில் | திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
வினய் பதக் (Vinay Pathak) ஒரு இந்திய நடிகரும் அரங்க உரிமையாளரும் ஆவார். புதிய வகை நடிகர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ள ரன்வீர் ஷோரே, ரஜத் கபூர், அபே டியோல் ஆகியவர்களுடன் இந்தியத்திரையுலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். கோஸ்லா கா கோஸ்லா, பேஜா ஃப்ரை மற்றும் ஜானி கட்டார் போன்ற விமர்சகர்களால் பாராட்டப்பட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.[1]
திரைப்பட வாழ்க்கை
[தொகு]வினய் ஸ்டோனி ப்ரூக்கில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்திற்குச் சென்று பல நாடகங்களில் நடித்தார்.[2] இவர் நண்பர்கள் அனைவரிடமும் தான் திரும்பச்சென்று பாலிவுட் நடிகராகப்போவதாகக் கூறினார். கோஸ்லா கா கோஸ்லா எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் இவரது நடிப்பைக் கண்ணுறுமுன்பேன பதக் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பின் குறுகிய காலத்தில், பேஜா ஃப்ரை எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் இவருடைய நட்சத்திர நடிப்பு சார்ந்து பல்வகையான கருத்துக்கள் கூறப்பட்டன.[3] அந்த ஆண்டு இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதைப் [மேற்கோள் தேவை] பெற்றார். இறப்பதற்குமுன் பிரிந்துசெல்வதைச் சொல்லிச் செல்லும் ஒரு சாதாரண மனிதரைப்பற்றிய கதையைச் சொல்லும் தஸ்விதனியா எனும் திரைப்படத்தையும் இவர் தயாரித்தார்.[4]
இவரது நண்பரும் இணைநடிகருமான ரன்வீர் ஷோரேவுடன் இவர் ரன்வீர் வினய் அவுர் கௌன்? படத்தின் வெற்றிக்குக் காரணமானார். ஸ்டார் தொலைக்காட்சியில்[5] இப்படம் ஒளிபரப்பப்பட்டது. அலைவரிசை Vல் ஒளிபரப்பப்பட்ட, சற்று பிரபலம் குன்றிய "ஹௌஸ் அரெஸ்ட்" படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து தோன்றினர். 2006 ஆம் ஆண்டில் ஈஎஸ்பிஎன் ஸ்டார் (ESPN-STAR) இல் "துனியா கோல் ஹெய்ன்" படத்தில் (ஆண்டி பாண்டர்ஸ் போன்றோருடன்) தோன்றி ஜெர்மெனியில் உலகக் கோப்பையை வென்றனர். இவரது நண்பர்கள் ரன்வீர், சிரேஷ் மேனன், கௌரவ் கேரா ஆகியோருடன் குழுவாக, வாய்ப்பூட்டு போடுதல்/ஏமாற்றுதல் அடிப்படையிலான ஷேகர் ஸுமனால் அளிக்கப்பட்ட சிறந்த இந்திய சிரிப்புப் படம்/நாடகத்தில் (படம்/நாடகம் ஸ்டார் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது) பங்கேற்றார். இவரது பிற்காலத்தில் தொலைக்காட்சியில் ரன்வீருடன் "கிரிக்கெட் க்ரேஸி"யை தொகுத்தளித்தார், அது இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கனடாவில் சீக்கியமதம் சார்ந்த ஒரு காதல்-கொலைக் கதையைப் பற்றிய மர்டர் அன்வெய்ல்ட் (2005) என்ற தொலைக்காட்சிப் படத்தில் காவல் ஆய்வாளர் குர்பால் பதஷ் எனும் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் பதக் தோன்றியுள்ளார்.
விமர்சனரீதியாக பாராட்டுப் பெற்ற ஜானி கட்டர், ஆவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்தும் வசூலில் பேரிழப்பை அளித்த படம் ஆஜா நச்லே ஆகியவற்றிலும் இவர் நடித்திருந்தார். சுதிர் மிஷ்ரா எனும் புகழ்பெற்ற இயக்குநர் தயாரித்த கோயா கோயா சந்த் படத்தில் இவரது பணி பாராட்டப்பட்டது. சமீபத்தில் அதிக வசூலைத் தேடிக்கொடுத்த ராப் நே பனா தி ஜோடி எனும் பாலிவுட் திரைப்படத்திலும் இவர் சிறப்பாக நடித்திருந்தார்.
பிரிட்டிஷ் நேண்டி கம்யூனிகேஷன்ஸால் (PNC) தயரிக்கப்பட்ட இவரது முன்னணித் திரைப்படம் 'ராத் கயீ பாத் கயீ' சமீபத்தில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற எச்.பீ.ஓ. (HBO) அலைவரிசையின் நியூயார்க் சௌத் ஏஷியன் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. அத்திரைப்படம் இந்தியாவில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது, மேலும் அது வினய் பதக் மற்றும் ராஜத் கபூர் ஆகியோரின் இரட்டிப்புத் திறனை மீளக்கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
சுஷில் ராஜ்பல் இயக்கிய 'அந்தர்ட்வண்ட்' என்ற இவரது திரைப்படம் சமூக விவகாரங்களைப் பற்றிய சிறந்த திரைப்படம் என்பதற்காக 2009ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினைப் பெற்றது. திரைப்படத்தில் பதக் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஹிப் ஹிப் ஹுர்ரே எனும் தொலைக்காட்சித்தொடரில் வின்னி ஐயா எனும் ஆங்கில ஆசிரியராகவும் நடித்துள்ளார்.
"கச்சா லிம்பு", "மும்பை கட்டிங்", "ஓ காட் நோ காட்", "டயர் பஞ்சர் அட்வென்சர்ஸ் ஆஃப் ஃபேண்டா கோலா" மற்றும் "SRK" திரைப்படங்கள், வெளிவரவிருக்கும் அவரது திரைப்படங்களில் அடங்கும்.
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர் பீகாரிலிருந்து வந்த மற்றொரு நடிகர் ஆவார். இவருக்கு வசுதா, ஷாரினீ எனும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
திரைப்படத்துறை வாழ்க்கை
[தொகு]- மை நேம் ஈஸ் கான் (2010) ஜிதேஷ்
- க்விக் கன் முருகன் (2009) சித்ர குப்தா
- ஸ்ட்ரெய்ட் (2009) திரு.பீனு படேல்
- ஓ, மை காட் (2008) ராஜேந்த்ர துபே
- தஸ்விதனியா (2008) அமர் கௌல்
- ராப் நே பனா தி ஜோடி (2008) பல்விந்தர் "பாபி" கோஸ்லா
- வயா டார்ஜிலிங் (2008) இன்ஸ்பெக்டர் ராபின் டட்
- மைத்யா (2008)
- ஜானி கட்டார் (2007)
- ஆஜா நச்லே (2007) திரு.சோஜர்க்
- பேஜா ஃப்ரை (2007) பாரத் பூஷண்
- ஸே ஸலாம் இந்தியா (2007)
- வாட்டர் (2007) ரபீந்த்ரா
- கோயா கோயா சந்த் (2007) ஷய்மோல்
- மனோரமா ஸிக்ஸ் ஃபீட் அண்டர் (2007)
- கோஸ்லா கா கோஸ்லா (2006) அசிஃப் இக்பால்
- மிக்ஸ்ட் டப்ல்ஸ் (2006) தோஷ்
- மர்டர் அன்வெய்ல்ட் (2005) இன்ஸ்பெக்டர் குர்பல் பதஸ்
- ஜிஸ்ம் (2003) DCP ஸித்தார்த்
- ஹர் தில் ஜோ ப்யார் கரேகா (2000) மோண்டி
- ஹம் தில் தே சூக் ஸனம் (1999) தருண்
- ஃபைர் (1998) கைட் அட் தாஜ் மஹால்
தயாரிப்பாளராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் |
---|---|
2008 | தஸ்விதனியா |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
[தொகு]- 2009:நியமிக்கப்பட்டது :ஃபில்ம்ஃபேர் பெஸ்ட் ஸப்போர்டிங் ஆக்டர் அவார்ட்-ராப் நே பனா தி ஜோடி
குறிப்புதவிகள்
[தொகு]- ↑ "My popular image restricts filmmakers, not me: Vinay Pathak" (in en-US). The Indian Express. 2015-07-22 இம் மூலத்தில் இருந்து 5 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181005221746/https://indianexpress.com/article/entertainment/bollywood/my-popular-image-restricts-filmmakers-not-me-vinay-pathak/.
- ↑ "I could have been a teacher". Hindustan Times (in ஆங்கிலம்). 2012-01-17. Archived from the original on 11 October 2020. Retrieved 2020-05-15.
- ↑ "Vinay Pathak ready to show you the funny in Island City" (in en). CatchNews.com இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616203909/http://www.catchnews.com/entertainment-news/vinay-pathak-ready-to-show-you-the-funny-in-island-city-movie-news-vinay-pathak-latest-interview-1471540214.html.
- ↑ "Vinay Pathak ready to show you the funny in Island City" (in en). CatchNews.com இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616203909/http://www.catchnews.com/entertainment-news/vinay-pathak-ready-to-show-you-the-funny-in-island-city-movie-news-vinay-pathak-latest-interview-1471540214.html.
- ↑ லாஃப் ரையத் , indiantelevision.com லிருந்து ஒரு கட்டுரை