லூயிசு டாகுவேரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லூயிசு டாகுவேரே
லூயிசு-யாக்-மான்ட்é டாகுவேரே
பிறப்பு நவம்பர் 18, 1787 (1787-11-18)
கோர்மீலெசு-என்-பாரிசிசு, வல் டுவாசு, பிரான்சு
இறப்பு ஜூலை 10, 1851 (1851-07-11)
Bry-sur-Marne, பிரான்சு

லூயிசு டாகுவேரே (நவம்பர் 18, 1787 – யூலை 10, 1851) என்பவர் ஒரு பிரான்சிய ஓவியரும், வேதியியலாளரும் ஆவார். இவர் டாகுவேரியோவகை என்னும் ஒளிப்படம் எடுப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்கியதன்மூலம் புகழ் பெற்றவர்.

வரலாறு[தொகு]

இவர் பிரான்சின், வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் டயோராமா எனப்படும் ஓவியக் காட்சி அரங்கு ஒன்றைக் கண்டுபிடித்தார். இது 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது.

1824 ஆம் ஆண்டில் யோசெப் நிசிபோர் நியெப்சு என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீடித்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது டையோராமா தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது டையோராமா தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார்.

பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், டாகுவேரியோவகை எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிசு_டாகுவேரே&oldid=1354573" இருந்து மீள்விக்கப்பட்டது