லொடோவிக்கோ பெராரி
லொடோவிக்கோ பெராரி Lodovico de Ferrari | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 2, 1522 பொலோனியா, இத்தாலி |
இறப்பு | 5 அக்டோபர் 1565 பொலோனியா, இத்தாலி | (அகவை 43)
தேசியம் | இத்தாலியர் |
துறை | கணிதம் |
அறியப்படுவது | நாற்படிச் சமன்பாடுகள் |
தாக்கம் செலுத்தியோர் | கார்டானோ |

லொடோவிக்கோ டி பெராரி (Lodovico de Ferrari, 2 பெப்ரவரி 1522 – 5 அக்டோபர் 1565) என்பவர் ஒரு இத்தாலியக் கணிதவியலாளர் ஆவார். கணிதத்தில் நாற்படிச் சமன்பாட்டிற்கு இயற்கணிதத் தீர்வு கண்டுபிடித்தவர்.
இத்தாலியின் பொலோனியா நகரில் பிறந்தவர் லொடோவிக்கோ. இவரின் பாட்டனார் பார்த்தலோமியோ டி பெராரி மிலான் நகரில் இருந்து பொலோனியாவிற்குக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். லொடோவிக்கோ தனது பணியை கார்டானோவின் வேலையாளாகத் தொடங்கினார். சிறு வயதிலேயே மிகவும் அறிவுக் கூர்மையுடையவராகக் காணப்பட்டமையினால், அவரை கார்டானோ தனது மாணவனாகச் சேர்த்துக் கொண்டு கணிதம் படிப்பித்தார். கார்டானோ இருபடிச் சமன்பாடு, முப்படியச் சமன்பாடுகளை நிறுவியதற்குப் பெரும் உதவியாக இருந்தார் லொதோவிக்கோ. இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு தானாகவே நாற்பட்சி சமன்பாட்டிற்கான தீர்வைக் கண்டுபிடித்தார். இத்தீர்வு கார்டானோவின் Ars Magna என்ற நூலில் உரிய இடத்தில் இடம்பெற்றது. தனது பதின்ம வயதிலேயே, உரோமில் ஆசிரியத் தொழிலாற்றும் பணி கிடைத்தது. 17வது வயதில் ஒரு சண்டையில் தன் வலது கை விரல்களை எல்லாம் இழந்தார். 1549 இலிருந்து ஏழு ஆண்டுகள் மிலான் நகரில் நிலச்சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி புரிந்தார். பெராரி 42-வது அகவையில் செல்வச்செழிப்புடன் இளைப்பாறினார்.[1]:300 பின்னர் இவர் தனது சகோதரி மடெலினாவுடன் பொலோனியாவில் வாழ்ந்து வந்தார். 1565 இல் பொலோனியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறிது காலத்தின் பின்னர் இவர் காலமானார். அவர் உடன் பிறந்தவள் அவரை நஞ்சு வைத்துக் கொன்றுவிட்டதாக ஒரு வதந்தியும் உலவியது.[2]:18
கார்டானோ-டார்ட்டாக்ளியா சமன்பாடு[தொகு]
1535 இல், முப்படியச் சமன்பாடுகளின் தீர்வு தொடர்பாக பெராரிக்கும், அவரது சமகாலத்தவருமான டார்ட்டாக்ளியாவுக்கும் இடையே சர்ச்சை கிளம்பியது. பெராரியின் ஆசிரியரையும், முந்தைய ஆசிரியர் கார்டானோவையும் அழிக்க டார்ட்டாக்ளியா தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததாக பரவலான கதைகள் உலவின. ஆனாலும் இவை புனையப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3] இன்றைய கணித வரலாற்றாளர்கள் முப்படிச் சமன்பாடுகளின் தீர்வுக்கு கார்டானோ, மற்றும் டார்ட்டாக்ளியா இருவரும் பங்களித்ததாகக் கூறி அத்தீர்வை "கார்டானோ-டார்ட்டாக்ளியா சமன்பாடு" என அழைக்கின்ரனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Smith, D. E., History of Mathematics, Vol 1 (நியூயார்க்: Dover Publications, 1958), p. 300.
- ↑ Gindikin, S., Tales of Mathematicians and Physicists (A. Shuchat, Trans.). Springer; 2007. ISBN 978-0-387-48811-0. p. 18.
- ↑ Rothman, T., "Cardano v Tartaglia: The Great Feud Goes Supernatural".
மேலும் படிக்க[தொகு]
- Jayawardene, S. A. (1970–80). "Ferrari, Lodovico". Dictionary of Scientific Biography 4. நியூயார்க்: Charles Scribner's Sons. 586–8. ISBN 978-0-684-10114-9.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் லொடோவிக்கோ பெராரி பற்றிய ஊடகங்கள்
- Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value)..