உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜு சிறீதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜு ஸ்ரீதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சின்னராசு சிறீதர், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 27 வயது வில்வித்தை வீரர்.[1] இவர் 2010 காமன்வெல்த் போட்டிகளில் " கூட்டம்பு " குழு பிரிவில் ரித்துல் சாட்டர்ஜீ, ஜிக்னேசு ஆகியோருடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.[2] இவர் தற்போது இராணுவத்தில் அவில்தாராகப் பணிபுரிகிறார். இவரது தந்தை சின்னராசு ஒரு நெசவுத் தொழிலாளி.

வெற்றிகள்[தொகு]

காமன்வெல்த் விளையாட்டு போட்டியுடன் சேர்த்து, ஸ்ரீதர் பெற்ற 23 பதக்கங்களில், 12 தங்கப் பதக்கங்கள், 5 வெண்கலப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும். இந்தோனேசியா, சீனா, பர்க்கி, குரோஷியா போன்ற நாடுகளில் நடந்த வில்வித்தை போட்டிகளில் இவர் பதக்கம் பெற்றுள்ளார்.[1]

ஏழ்மையான சூழல்[தொகு]

சிறீதரின் குடும்ப நிலை இவரது வில்வித்தை விளையாட்டிற்குத் தேவைப்படும் பொருளாதார வசதியைத் தரவில்லை; இவரது பயிற்சியாளர் சீகான் உசைனியின் முயற்சியில் 2 லட்சம் நிதியுதவி பெற்றுத் தரப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 தினமலர்
  2. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  3. தினமணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜு_சிறீதர்&oldid=3226684" இலிருந்து மீள்விக்கப்பட்டது