ரங்கமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரங்கமலை[தொகு]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடடம் கரூர் தேசிய நெடுஞசாலையில் அமைந்துள்ள கூம்பு வடிவமான மலை ரங்க மலை ஆகும் .இம்மலையில் மல்லீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் அமைந்துள்ளது.அளவில் பெரியதான இக்கோவிலுக்கு அர்ச்சகர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் மலை மேல் ஏறி மாலை வரை இருந்து திருப்பணிகளை முடித்து விட்டு இறங்கிவருகின்றனர். மலையின் உச்சியில் விளக்கு கம்பம் உள்ளது செங்குத்தான இம்மலைக்கு முறையான படிக்கட்டுக்கள் அமைக்கப்படவில்லை எனவே இம்மலை ஏறுவது சற்று கடினமே.ஆனாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மலைக்குச் சென்று மல்லீஸ்வரரை வழிப்பட்டு வருகின்றனர் இம்மலையில் நல்ல மூலிகைகள் இருப்பதால் இங்கு தங்கினால் நோய்கள் நீங்கும் என நம்புகின்றனர்.பழமையான இக்கோவில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது .

மேற்கோள்;வரலாற்றில் திண்டுக்கல் .எம் .எஸ் .கந்தவேல் .பதிப்பு  ஏப்ரல் 2014.ஜே.வி.பதிப்பகம்  வடமதுரை .திண்டுக்கல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கமலை&oldid=2342007" இருந்து மீள்விக்கப்பட்டது