மதம் என்றால் என்ன (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதம் என்றால் என்ன எனும் தமிழ் நூல் இராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்கள் பாஸ்டன் நகரில் 1880 ம் ஆண்டில் அமெரிக்க மதச் சுதந்திர சங்கத்தில் மதம் என்றால் என்ன? என்னும் பொருள் பற்றி ஆற்றிய பேருரையின் தொகுப்பாகும். இது லண்டன் பகுத்தறிவு நூற்பிரசுரக் கழகத்தாரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் Ingersoll Lectures and Essays என்ற நூலில் உள்ள சிறிய கட்டுரையாகும். இந்நூலில் கடவுளின் பெயரால் நடைபெறும் புரட்டையும், கடவுளின் தன்மையையும் தெள்ளத் தெளிவாக எடுத்துகாட்டப்பட்டிருக்கின்றன. இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சோ. லட்சுமிரதன் பாரதி எம்.ஏ., பி.எல். இதை பெரியார் சுயமரியாதை கழகம் வெளியிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதம்_என்றால்_என்ன_(நூல்)&oldid=2497950" இலிருந்து மீள்விக்கப்பட்டது