பேச்சு:காகம் (பேரினம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகம் (பேரினம்) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சட்டவிரோதம், சமூக விரோதம் - மாற்றுத் தமிழ்ச்சொற்கள்?? (சமூகப் பகை? சமூக எதிர்ப்பு? சட்டத்துக்குப் புறம்பான?)--Ravidreams 18:58, 13 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நான் இதனை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். சட்ட விரோதம் என்பது சட்டத்துக்கு எதிரானது, சட்டத்தை மீறுவதாவது என்று பொருள். எனவே சட்ட மீறல்/மீறுகை. சட்ட எதிரியம் என்றும் கூறலாம். சமூக விரோதமானது, சமூகத்துக்கு (சமூக நலனுக்கு) எதிரானது. சமூக எதிரி --> சமூக எதிரியம். சட்டப் பகையானது, சட்டத்துக்கு புறம்பானது என்பது இடுவே. சட்டப்புறம்பு என்றும் சொல்லலாம். செ.ப.அ.வில்: புறம்பு என்பதைப் பார்க்கவும். சமூக விரோதி என்பதை சமூகப் பகைவர் எனலாம். சமூக விரோதம் என்பதை சமூக முரண் எனலாம் (முரண் = எதிர்; முரண்தல் = பகைத்தல்)--செல்வா 20:53, 16 டிசம்பர் 2008 (UTC)

ஆதாரம்[தொகு]

"காகங்களை பழக்கி இலகுவாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றை செல்லவிலங்குகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்." இத்தொடருக்கு ஆதாரம் தருவது அவசியமென நினைக்கிறேன். --மது 18:00, 25 மார்ச் 2007 (UTC)

ஆதாரம் தேவை என்ற குறிப்பைச் சேர்த்துள்ளேன்.--சிவக்குமார் \பேச்சு 20:16, 16 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காகம்_(பேரினம்)&oldid=2668755" இலிருந்து மீள்விக்கப்பட்டது