புறம்போக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல் தரிசு, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு எனக் குறிக்கப்படுகின்றன. இப் புறம்போக்கு நிலங்கள் தனியாரல்லாத, மாநில அரசு, நடுவண் அரசு, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றவை ஆகும்.

சொல்விளக்கம்[தொகு]

தமிழ்நாட்டில் நிலப் பயன்பாடு தொடர்பான பதிவுகளில் சோழர்கள் காலத்திலிருந்தே புறம்போக்கு என்கிற சொல் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. இந்த இடங்கள் ‘போக்கு’, அதாவது வருவாய் ஆவணங்களுக்கு வெளியே (புறம்) இருப்பதால் ‘புறம்போக்கு' எனப்பட்டன. அரசனோ - அரசோ, புறம்போக்குப் பகுதிகளில் இருந்து எந்த வரியையும் எதிர்பார்க்க முடியாது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. நித்தியானந்த் ஜெயராமன் (2016 செப்டம்பர் 24). "புறம்போக்கு என்கிற ‘பாதுகாப்பு'". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 24 செப்டம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறம்போக்கு&oldid=2746132" இருந்து மீள்விக்கப்பட்டது