புதுருவகல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடமிருந்து வலமாக, சஹம்பதி பிரம்மா, மைத்திரேயர், வஜ்ரபானி

புதுருவகல இலங்கையின் வெல்லவாயவிலிருந்து இருந்து தென்கிழக்காக நான்கு மைல் தொலைவில் உள்ள ஒரு மகாயான பௌத்த தலம் ஆகும். புதுருவகல என்றால் புத்தரின் கற்சிற்பம் என்று பொருள். இங்கு தான் 51 அடி உள்ள இலங்கையின் மிகப்பெரிய புத்தர் சிலை காணப்படுகிறது[1]. இது தீபங்கர புத்தரின் சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

எண்ணெய் விளக்கு

இந்த இடத்தை குறித்த சரித்திர தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. இதன் உண்மையான பெயர் கூட அறியப்பெறவில்லை, புதுருவகல என்பது காரணப்பெயர் ஆகும். இது 9ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது[1]. இங்குள்ள பல சிலைகள் மகாயான பௌத்தத்தை சார்ந்த சிலைகளாக உள்ளன[2]. அவலோகிதேஷ்வரர், தாரா தேவி முதலிய போதிசத்துவர்களின் சிலைகள் இங்கே காணக்கிடைக்கிறது. இலங்கையில் முற்காலத்தில் மகாயானம் பின்பற்றப்பட்டது, அந்த காலகட்டத்தில் இச்சிற்பங்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இங்குள்ள போதிசத்துவர்களின் சிலைகளின் அமைப்பும் இருப்பிடமும் மஞ்சுஸ்ரீ மூலகல்பம் என்னும் பௌத்த தாந்திரீக நூலில் கூறப்பட்டுள்ளவாறு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இங்கு வஜ்ரயான பௌத்தமும் பின் பற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது[3]

தேரவாத - மகாயான பிரிவினை காரணமாக தற்போது இருப்பது இவ்விடம் கவனிப்பாரற்று உள்ளதாக ஒரு சாரார் கருதுகின்றனர்[4]

இவற்றையும் காண்க

  • இலங்கையில் மகாயானம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Buduruvagala, http://www.panlanka.com/destin/buduruvagala.html
  2. Buddha's Rock Mahayana Legacy at Buduruvagala
  3. BuddhaNet_Net Sacred Island – A Buddhist Pilgrim's Guide to Sri Lanka Buduruvagala, [1]
  4. [2]

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுருவகல&oldid=2761404" இலிருந்து மீள்விக்கப்பட்டது