பயனர்:Senthilkumar1996/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீகாந்தையா தும்கூர் மாவட்டத்தில் பிறந்தார்.இவர் ஆங்கிலத்தில் பெங்களூர் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மெட்ராஸ் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார். இவர் மைசூர் மகாராஜா கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார் . இருபத்து ஐந்து வருடம் அங்கே பணியாற்றிய பின்பு பெங்களுரு மத்திய கல்லூரியில் சேர்ந்தார்.பிறகு மைசூர் பல்கலைகழகத்தில் கன்னட பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் கன்னட மொழிக்காக அரும்பாடுபட்டார் மேலும் புதிய எழுத்தாளர் தலைமுறையினை கன்னட மொழியில் தங்கள் கருத்துகளை எழுத வலியுறுத்தினர் . கூவேம்பு , ராஜரத்தினம் போன்ற கன்னட எழுத்தாளர்களுக்கு இவரே முன்னோடியாக திகழ்ந்தார். இவரது புகழ்பெற்ற படைப்புகளுள் ஒன்று கருநாளு பால் பீலேகு, இது ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு ஆகும். இவர் கன்னட நாடக துறையினுக்கு ஒரு புதிய வழி அமைத்து கொடுத்தார். இவர் கடாயூத நாடகம், அஸ்வத்தாமன், பரசிக்கரு போன்ற நாடகங்களை இயற்றினார். இந்த நாடகங்கள் எல்லாம் கிரேக்க கலாச்சாரத்தினை பிரதிபலித்தன. இவருக்கு மைசூர் அரசர் "ராஜ சேவசக்த " விருதினை வழங்கினார். ஜனவரி மாதம் 1946-ஆம் வருடம் பெங்களுரில் இயற்கை மரணம் எய்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Senthilkumar1996/மணல்தொட்டி&oldid=1876106" இலிருந்து மீள்விக்கப்பட்டது