பயனர்:Chinkamukan
- பெயர்: சிங்கமுகன் (எ) லியோ ஆன்டனி (தந்தையார் இட்ட பெயர்).
- பிறப்பு: 30 சித்திரை, 2018 (திருவள்ளுவராண்டு)
- வாழ்வின் நோக்கம்: தமிழில் இல்லை என்ற சொல்லை நீக்குவது
- பிறவிக்கடன்: வாழ்வே என் அன்னைக்காக அற்பனிப்பது
- விரும்புவது: வாழ்வில் புதுமையை தமிழின் இனிமையை
- படிப்பது: கடல் நுண்ணுயிரியலில் முனைவர் பட்டத்திற்காக
- படித்தது: மு.அ. நுண்ணுயிரியல்; மூலக்கூற்று நோய்நாடலியலில் மேம்பட்ட பட்டயம்.
- வாழ்ந்தது: எனது ஆசிரியனான பாரதிபின்பற்றி பல்கலைக்கழகம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), திருச்சிராப்பள்ளி
- வாழ்ந்துகொண்டிருப்பது: சேரநாடான கேரளாவிலுள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சிக் கழகம், கொச்சி
என் கடன் அன்னைக்குப் (தமிழுக்கு) பணி செய்து கிடப்பதே.
- ஆளுமை: ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாத கட்டுரைகளை அதிகமாகத் தொகுப்பது. முதல் முயற்சி: இராப்பியணிப்பாசி
- ஓயாத அலைகள்: என் இனத்திற்கு நான் இழைத்தக் கேடு. உதவி என்று வந்தவனை காலால் எட்டி உதைத்தால் அது தமிழகத்தை விட்டு ஈழமாக கீழே வீழ்ந்துள்ளது
- வெறி: முன் தோன்றியக்குடியை முன்னிற்கு இட்டுச்செல்வது.
- தூக்கம்: வாழ்வின் எல்லை வரை இல்லை - என் வெறி அடங்கியவுடன் உறங்கச்செல்லும்.
வாழ்வே தமிழாக - சிங்கமுகன்
தமிழ் மொழி
- 18 மெயெழுத்தும் 18 உச்சரிப்பையேக் கொண்டது.
- இப்பதிணெட்டும் வெவ்வேறு பிறப்பிடங்களைக் கொண்டது. அல்லது அவை வல்லின மெல்லினமாக மாறுபடுகிறது.
- அது எங்கனம்: 6 வல்லினத்திற்கும் இணையான மெல்லினம். க - ங, ச - ஞ, ட - ண, த - ந, ப - ம மற்றும் ற - ன.
- பிறகு எப்படி வடமொழியில் இல்லாத ள, ழ கரம் தமிழில் தோன்றிற்று. அவை இரண்டும் வெவ்வேறு பிறப்பிடங்களைக் கொண்டவை. அதனால் தான் வடமொழியில் உள்ளதுப்போல் தமிழில் k, kha, ga, gha எனத் தமிழில் தோன்றவில்லை.
- வடமொழியில் ந - ன, ஒன்றாகத் தானே பாவிக்கின்றனர். ஏன் தமிழின் மிக நெருங்கிய மொழியான மலையாளத்திலும் ன வைக் காணவியலாதே. ஆம், சிலர் சொல்கின்றனர் இவை இரண்டும் ஒரே ஒலியைக் கொண்டுள்ளன. அவை முதல் எழுத்தாகத் தோன்றும் போது முதல் எழுத்தாக வரும் போது அவ்வொலியைத் தாங்கியும் பின் எழுத்தாக வரும்போது பின் வந்த எழுத்தின் ஒலியைத்தாங்கியும் ஒலிக்கும். இது எங்ஙனம் மாறுபடும். அதற்குத் தான் தமிழ் விளக்கம் தருகிறது. எங்கள் மொழி உங்களது மொழியைப் போல் ஒரே இடத்தில் பிறக்கும் அனைத்திற்கும் எழுத்தை உருவாக்கவில்லை. வெவ்வேறு பிறப்பிடங்களைக் கொண்டவைகளுக்கே எழுத்தை உருவாக்கினோம் என்று.
- அப்போது ர - ற எங்ஙனம் என்றவுடன் அதுவும் வெவ்வேறு பிறப்பிடம் தான் அது ஒலியால் மட்டும் மாறுபடவில்லை என்கிறது நம் அழகுத்தமிழ்.
ஆனால் இது புரியாதச் சிலர் தமிழை வெவ்வேறு ஒலியுடன் சம்பந்தப் படுத்தி உச்சரித்தல் எக்காலமும் தமிழுக்கு ஏற்கா ஒன்று. குறிப்பாக தமிழில் முதலில் ச எழுத்து வரும்போது ஸ உச்சரிப்பைத் தாங்கி வரும் எனவும் நடுவில் வரும் போது cha உச்சரிப்பைத் தாங்கி வரும் எனவும் முறன்படுகின்றனர். ஐயா நீங்களே கூறுங்கள் தமிழுக்கு ஏதையா ஸ. பின் ஏனையா பல்லாயிரம் தமிழர்கள் கிரந்த எழுத்தான ஸவை ஒழிக்கப் போராடனும். என்னையா யாருக்கும் ஒன்றும் புரியவில்லையா. முடிவாக ஒன்று ச என்பது - Cha உச்சரிப்பு மட்டும். அது அங்ஙனம் உச்சரிக்கும் பொழுதே வல்லின உச்சரிப்பைத் தாங்கி வரும். உச்சரிப்பு என்பதே மொழி. எக்காலத்தும் பிறமொழிக் கலப்பு ஏற்காது. அண்ணாதுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பார், பிற மொழியிற் கலையை வாழவைப்பதற்கு தமிழர்களே அதிகம் போராடுகின்றனர் என்று. ஏனென்றால் அம்பூட்டு நல்லவைங்களாயா நாமெல்லாம். இல்லையா நாமெல்லாம். தம் பெருமைத் தானே உணராத மடையர்கள் என்பதைச் சொல்லாமற் சொன்னார்.
- இதில் பூரிப்பு என்னவென்றால், தமிழை தமிழர்களைத் தவிர்த்து வேறு நாட்டவர் நன்முறையில் காத்துவருகின்றனர். ஆனால் அவர்களும் செந்தமிழ் பயிற்றுனரே. அவர்கள் இல்லையெனில் மேலேக் குறிப்பிட்டக் கருத்துக்கள் எனக்கும் உங்களைப் போலவே புலப்படாமல் மறைந்துப் போயிருக்கும்.
வருத்தம்: தமிழில் காணப்படுவதோ ஒரே ஒலியுள்ள சகரம். இதற்கு தமிலர்களோ பிறமொழியில் உலவும் உச்சரிப்புகளை இட்டு மெருகேற்றுகின்றனர். காட்டாக S மற்றும் sha. வாய்ப்பே இல்லைங்க தமிழ் நன்றாக வாழும். செண்பக (Chenpakam) மலருக்கு ஆங்கிலத்தில் சம்பக (Champaka) மலர் என விளிக்கின்றனர். இதற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இது சமற்கிருதத்தில் இருந்து தோன்றியதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். அது எனக்குத் தெறியாதத் தகவல். ஆனால், இதற்குத் தமிழில் Shenbagam என்று எழுதியுள்ளனர். இதை யாரிடம் நான் முறையிடுவது. என்னால் இயன்றத்திருத்தமாக Chenpakam என்று மட்டுமே மாற்ற முடிந்தது. சமற்கிருதத்திலேயே Champakam என்று உரைக்கின்றனராம். தமிழில் ஷென்பகம் என்று உரைக்கின்றனராம்.