டிராவர்ட்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிராவா்ட்டைன்
டிராவா்ட்டைன்

டிராவா்ட்டைன் சுண்ணாம்புக் கனிம வகையைச் சார்ந்ததாகும். கால்சியம் கார்போனேட் () வேதிக்கூட்டல் கண்ணறைகளால் ஆன ஒரு வகைப் படிமப் பாறையே டிராவர்ட்டைன் ஆகும். இதற்குத் தேவையான கால்சியம் கார்போனேட் கூட்டுப் பொருள் அவற்றை கரைத்து வரும் கரைசல்கள் ஆவியாவதன் மூலம் எஞ்சிய பொருள்களான ஒரு கார்போனேட் படிமமாகும். இக்கனிமம் ஸ்டாலக் டைட் சுண்ணாம்புப் பாறைக் குகைகளின் அடித்தளத்திலிருந்து எறும்புப் புற்று போல் மேல் நோக்கி வரும் பாறைகளைப் போன்ற உருவாக்கத்தைப் பெற்றுள்ளது. இவற்றிற்கு வேண்டிய சுண்ணாம்புப் பொருள் நீரூற்று மற்றும் நீரிலிருந்து உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.

இருப்பிடம்[தொகு]

ரோம் நகரத்திற்கு அருகிலுள்ள டிவோலி நகரின் ஆனியோ ஆற்றுப் பகுதியில் எடை மிகுந்த பறையாகக் காணப்படுகிறது. இவ்வகைக் கனிமம் அந்நாட்டில் மஞ்சள் கல் பூங்காவில் உள்ள வெந்நீர் ஊற்றைச் சுற்றி மிகுதியாகக் கிடைக்கிறது. இத்தாலியிலுள்ள மட்லாக், நரேஸ்ப்பாரோ பகுதியில் உள்ள ஊற்றுகளிலிருந்து இவ்வகைக் கரைசல்கள் வெளிவரும்போது அந்த ஊற்றுப் பகுதியினுள் குச்சி, பரவைக்கூடு போன்றவை விழுந்தவுடன் அவற்றைச் சுற்றி இக்கன்னிமச் சுண்ணாம்பு படிவு இறுகிய கடினமான பாறை போன்ற பூச்சாக உருவாகிறது. சிறிது சிறிதாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக உருவாகித் தடித்த பாறைப் படிவுகளாகக் கண்ணப்படும். இந்நிலையில் இவற்றைச் சுண்ணாம்பு டூஃபா என்பர்.[1]

மேற்காேள்[தொகு]

  1. "டிராவா்ட்டைன்". அறிவியல் களஞ்சியம் தொகுதி 11. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 8 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராவர்ட்டைன்&oldid=2823083" இருந்து மீள்விக்கப்பட்டது