செவ்வியல் அஞ்சல் தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செவ்வியல் அஞ்சல்தலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1898ன் மிசிசிப்பி கடந்த வெளியீடான 1-டாலர் "கறுப்பு எருது" சிறந்த செவ்வியல் அஞ்சல் தலைகளுள் ஒன்று.

செவ்வியல் அஞ்சல் தலை (classic stamp) என்பது, அஞ்சலியலாளர்களால் தனித்தன்மையானவை என்று கருதப்படுகின்ற அஞ்சல் தலைகளாகும். இவை பொதுவாக அஞ்சல் தலை உருவாக்கத்தின் தொடக்ககாலத்தில், எடுத்துக்காட்டாக 1870 இற்கு முன்னர் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகளைக் குறிக்கிறது. ஆனாலும், எல். என். வில்லியம்சு குறிப்பிட்டது போல், இச்சொல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் வரையறுக்கப்படவில்லை. சில வரைவிலக்கணங்கள், 1900 இற்கு முன்னர் வெளியான அஞ்சல் தலைகளை இதற்குள் அடக்குகின்றன. ஆனாலும், 1900 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட எல்லா அஞ்சல்தலைகளுமே செவ்வியல் அஞ்சல் தலைகளாகக் கொள்ளப்படுவதில்லை என்பதுடன், 1900 இற்குப் பின்னர் வெளியிடப்பட்ட சில அஞ்சல்தலைகளைச் செவ்வியல் அஞ்சல் தலைகள் எனக் கொள்வதுண்டு. வில்லியம்சு, செவ்வியல் காலம் 1840 இற்கும் 1875 இற்கும் இடைப்பட்டது எனக்கருதும் அதேவேளை சேம்சு ஏ. மக்கே தான் எழுதிய செவ்வியல் அஞ்சல் தலைகளின் காலம் (World of Classic Stamps) என்னும் நூலில் 1840 இற்கும் 1870 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான அஞ்சல் தலைகளுக்கு இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வியல்_அஞ்சல்_தலை&oldid=2988146" இலிருந்து மீள்விக்கப்பட்டது