ஒலிம்பசு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Li wei ran பக்கம் ஒலிம்பசு மலைச்சிகரம் என்பதை ஒலிம்பசு மலை என்பதற்கு நகர்த்தினார்: அது சிகரம் இ... |
No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
'''''ஒலிம்பசு மலை''''' என்பது |
'''''ஒலிம்பசு மலை''''' என்பது [[கிரேக்கம் நாடு|கிரேக்க நாட்டில்]] உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின் இடையே அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை கடவுள்களின் வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பிய மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. |
||
[[File:Mytikas from Skala.jpg|thumb|right|மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்]] |
[[File:Mytikas from Skala.jpg|thumb|right|மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்]] |
||
04:06, 23 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
ஒலிம்பசு மலை | |
---|---|
ஒலிம்பசு மலை | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 2,918 m (9,573 அடி)[1] |
இடவியல் புடைப்பு | 2,355 m (7,726 அடி)[2] |
இடவியல் தனிமை | 254 km (158 mi) |
ஆள்கூறு | 40°05′08″N 22°21′31″E / 40.08556°N 22.35861°E |
புவியியல் | |
அமைவிடம் | கிரீசு |
மூலத் தொடர் | சலோனிகா வளைகுடாவின் அருகில் உள்ள மகடோனியா மற்றும் தெசாலி |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 2 ஆகத்து 1913 கிறிசுடோசு ககலோசு, ஃப்ரெட்ரிக் போய்சொன்னாசு மற்றும் டேனியேல் பாட்-போவி |
ஒலிம்பசு மலை என்பது கிரேக்க நாட்டில் உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின் இடையே அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை கடவுள்களின் வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பிய மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒலி்ம்பசு மலையில் 52 சிகரங்களும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் அரியவகை பல்லுயிரிகளும் இருக்கின்றன. இந்த மலையில் செழிப்பான பல வகைத் தாவரங்களும் இருக்கின்றன. இந்த மலை கீரிசு நாட்டின் தேசிய பூங்காவாகவும் உலகின் பல்லுயிர் வலயங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.[1]
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக் காண்பதற்கும், அதன் சரிவுகளில் பயணம் செய்யவும், அதன் சிகரத்தை அடையவும் வருகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட புகலிடங்கள் மற்றும் மலையேற்றத்திற்காக ஏறும் வழிகள் ஆகியன இந்த மலையை ஆராய வருபவர்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இந்த மலையை ஏறுவதற்கு தொடக்கப் புள்ளியாக லிட்டோகோரோ நகரம் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "General Information". Olympus National Park. Management Agency of Olympus National Park. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016.
- ↑ "Europe Ultra-Prominences". peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 31 December 2010.