"ரந்தெனிவலைச் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,249 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ரந்தெனிவலைச் சண்டை''' என்பது, சிங்கள - போர்த்துக்கேயப் போர்களின் ஒரு பகுதியாக 25 ஆகத்து 1630 இல் [[பதுளை]] நகருக்கு அண்மையில் அமைந்த வெல்லவாயா என்னும் இடத்துக்கு அருகில் உள்ள ரந்தெனிவலை என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டை ஆகும். இது, கண்டி மன்னன், அவனது இரண்டு மகன்கள் ஆகியோரின் படைகள், போர்த்துக்கேய ஆளுனன் [[கான்சுட்டன்டினோ டி சா டி நோரொஞ்ஞா]]வின் தலைமையிலான படைகளுக்கும் இடையில் நிகழ்ந்தது. கான்சுட்டன்டினோ டி சா, பதுளை ஊடாகக் கண்டிக்குள் படையெடுத்தபோது இச்சண்டை ஏற்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். இச்சண்டையின்போது போர்த்துக்கேயர் பக்கமிருந்த "[[லாசுக்காரின்]] படை" எனப்பட்ட சிங்களப் படையணிகள் முழுமையாக கண்டியரசன் பக்கத்துக்குச் சென்றுவிட்டன. போர்த்துக்கேயப் படைகள் முழுமையாக அழிக்கப்பட்டதுடன், படைகளுக்குத் தலைமையேற்று வந்த கான்சுட்டன்டினோ டி சாவும் கொல்லப்பட்டான்.
 
== சண்டை ==
ரந்தெனிவலையில் லாசுக்காரின் படைகள் அணிமாறியவுடன் இரவு நேரத்தில், அம்புகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் போர்த்துக்கேயப் படைகள் தாக்கப்பட்டன. இரவு நேரத்தில் அவர்களால் பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள முடியவில்லை. இதற்கும் மேலாகப் பல மணிநேரம் பெய்த மழையால், போர்த்துக்கேயரின் வெடிமருந்துகள் பயனற்றவை ஆகிவிட்டன. போர்த்துக்கேயரோடு சேர்ந்து சண்டையிட்ட லாசுக்காரின் படைத் தலைவன் ஒருவனே போர்த்துக்கேய ஆளுனன் டி சாவைக் கொன்றான்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2175812" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி