திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''திருமந்திரம்''' என்பது [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. இந்த எண்ணிக்கையின் கூட்டெண் 3 ஆகும். சராசரியாக ஒவ்வொரு பாடலும் நாங்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. இந்த எண்ணிக்கையின் கூட்டெண் 3 ஆகும். இதன் நூலமைப்பினைப் பொறுத்தமட்டில், இதை இயற்றியவர் 3, 4, 9 என்ற எண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிகிறது. இந்த எண்களுக்கு ஏன் அதன் ஆசிரியர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார், அவை ஏதாவது சித்தாந்தத்தில் முக்கியத்துவம் பெ்றுள்ளவையா என்பது பற்றி, ஆய்வாளர்கள் ஆராய்ந்து திடமான முடிவுக்கு இன்றுவரை வரவில்லை. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறனைப்போல் சுருக்கமாகக் கூறுகிறது.
'''திருமந்திரம்''' என்பது [[திருமூலர்|திருமூலரால்]] எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. இந்த எண்ணிக்கையின் கூட்டெண் 3 ஆகும். சராசரியாக ஒவ்வொரு பாடலும் நாங்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. இந்த எண்ணிக்கையின் கூட்டெண் 3 ஆகும். இதன் நூலமைப்பினைப் பொறுத்தமட்டில், இதை இயற்றியவர் 3, 4, 9 என்ற எண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளமை தெரிகிறது. இந்த எண்களுக்கு ஏன் அதன் ஆசிரியர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார், அவை ஏதாவது சித்தாந்தத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா என்பது பற்றி, ஆய்வாளர்கள் ஆராய்ந்து, திடமான முடிவுக்கு இன்றுவரை வரவில்லை. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.


[[வேதம்]],[[ஆகமம்]] ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது [[சைவ ஆகமம்]] என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் [[திருவாசகம்]] சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
[[வேதம்]],[[ஆகமம்]] ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது [[சைவ ஆகமம்]] என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் [[திருவாசகம்]] சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

14:26, 25 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. இந்த எண்ணிக்கையின் கூட்டெண் 3 ஆகும். சராசரியாக ஒவ்வொரு பாடலும் நாங்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. இந்த எண்ணிக்கையின் கூட்டெண் 3 ஆகும். இதன் நூலமைப்பினைப் பொறுத்தமட்டில், இதை இயற்றியவர் 3, 4, 9 என்ற எண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளமை தெரிகிறது. இந்த எண்களுக்கு ஏன் அதன் ஆசிரியர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார், அவை ஏதாவது சித்தாந்தத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா என்பது பற்றி, ஆய்வாளர்கள் ஆராய்ந்து, திடமான முடிவுக்கு இன்றுவரை வரவில்லை. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.

வேதம்,ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருமந்திரத்தின் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள ‘கடவுள் வாழ்த்து‘ என்பதன் முதலாவது பாட்டுப் பின்வருமாறு அமைந்துள்ளது;

ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரித்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே

இப்பாட்டில் எவற்றை திருமூலர் கூறியுள்ளார் என்பதை, சைவப்புலவர்கள் ஆராய்ந்து தெளிவாக இன்றுவரை கூறாத நிலைதான் தொடர்கிறது.

திருமந்திரத்தில் அகராதி, பெற்றம், சைவ சமயம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் போன்ற சொற்களும், சொற்றொடர்களும் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டுப் பாடல்கள்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமந்திரம்&oldid=1284002" இலிருந்து மீள்விக்கப்பட்டது