திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 121.242.28.57ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27: வரிசை 27:
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
[[பகுப்பு:5 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:5 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]

==வெளி இணைப்புகள்==

*[http://www.shaivam.org/tamil/thirumurai/thm_0.htm திருமூலர் திருமந்திரம் பாயிரம்]


[[en:Tirumandhiram]]
[[en:Tirumandhiram]]

13:01, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

திருமந்திரம் என்பது ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்து ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நாங்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி கூறுகிறது.

வேதம்,ஆகமம் ஆகிய இரண்டிற்கும் திருமந்திரம் விளக்கம் தருகிறது. இது சைவ ஆகமம் என்றும் போற்றப்படுகிறது.திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக பெரியோர்களால் வைக்கப்பட்டுள்ளது. தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.

எடுத்துக்காட்டுப் பாடல்கள்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமந்திரம்&oldid=1264090" இலிருந்து மீள்விக்கப்பட்டது