கொள்வனவு ஆற்றல் சமநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Парытэт пакупніцкай здольнасці
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ilo:Pagpadaan ti kapigsa ti panag-gatang
வரிசை 56: வரிசை 56:
[[hu:Vásárlóerő-paritás]]
[[hu:Vásárlóerő-paritás]]
[[id:Keseimbangan kemampuan berbelanja]]
[[id:Keseimbangan kemampuan berbelanja]]
[[ilo:Pagpadaan ti kapigsa ti panag-gatang]]
[[is:Kaupmáttarjöfnuður]]
[[is:Kaupmáttarjöfnuður]]
[[it:Teoria della parità dei poteri di acquisto]]
[[it:Teoria della parità dei poteri di acquisto]]

20:56, 28 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

2003ஆம் ஆண்டில் உலகநாடுகளின் கொள்வனவு ஆற்றல் சமநிலை(கொ.ஆ.ச)படுத்திய மொத்த தேசிய உற்பத்தி.ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்தை அடிப்படையாக பாவிப்பதால் அதன் குறியீடு 100 எனக்கொள்ளப்பட்டுள்ளது.பெர்முடாவின் குறியீடு 154 என்பதால் அங்கு அமெரிக்காவை விட 54% விலைகள் கூடுதலாக இருக்கும்.

கொள்வனவு ஆற்றல் சமநிலை அல்லது பொருள் வாங்குதிறன் சமநிலை (purchasing power parity) என்பது இரு நாடுகளின் வாங்கும் (கொள்வனவு) திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு ஆகும்.கஸ்டாவ் காசல் என்பவர் 1918ஆம் ஆண்டு ஒரு பொருளுக்கு ஒரு விலை என்ற கொள்கையின்படி இதனை வடிவமைத்தார்.[1]


விளக்கம்

மிகவும் எளிதான வகையில் அளவிடும்போது:

இங்கு:

"S" - நாடு1 க்கும் நாடு2 க்கும் உள்ள நாணயமாற்று வீதம்
"P1" - பொருள் "க"வின் அடக்கவிலை நாடு1 இன் நாணயத்தில்
"P2" - பொருள் "க"வின் அடக்கவிலை நாடு2 இன் நாணயத்தில்

அதாவது,ஓர் ஒத்திருக்கும் பொருள் இரு நாடுகளிலும் அந்நாட்டு நாணயத்தில் ஒரே விலையைக் கொண்டிருக்குமாறு நாணயமாற்றுவீதம் சரிசெய்யப் படும்.

காட்டாக, கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் நாணயமாற்று வீதம் USD/CDN 1.50 ஆக இருக்கும்போது, ஓர் சாக்கெலெட் பட்டை கனடாவில் C$1.50 விற்குமென்றால் அதே அளவுள்ள சாக்லெட் பட்டை ஐக்கிய அமெரிக்காவில் US$1.00 விற்கப்பட வேண்டும்.(அதாவது, இரு நாடுகளிலும் சாக்லெட்டின் விலை US$1.00)

அளப்பதில் உள்ள சிக்கல்கள்

இக்கொள்கை ஏட்டளவில் எளிதாக இருப்பினும் பயன்படுத்தும்போது பல சிக்கல்கள் உள்ளன. இரு நாடுகளின் கொள்வனவு திறனை கணக்கிட எடுத்துக்கொள்ளும் பொருள்களின் கூடை ஒப்பிடக்கூடியதாக இருக்குமாறு அடையாளம் காணுவதில் பல சர்ச்சைகள் எழுகின்றன. தவிர,நாள்பட்ட கணக்கீடுகளில் அந்நாடுகளில் நிலவும் விலையேற்றமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மேற்கோள்கள்

  1. Gustav Cassel, "Abnormal Deviations in International Exchanges," in Economic Journal, (December, 1918), 413-415

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்வனவு_ஆற்றல்_சமநிலை&oldid=1007159" இலிருந்து மீள்விக்கப்பட்டது