கேம்பிரியக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லுயிருழியின் தொன்மையான காலம். 640 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கி 70 மில்லியன் ஆண்டு வரை. விலங்கின் புதைபடிவங்கள் அதிகமாக கிடைத்தது. புவி பரப்பில் ஏற்பட்ட மாறுதல்களை, நிலவடிவியல்,புவி பரவல் தகவல்களை அறிவதற்கு இக்காலப் புதை படிவங்கள் பேருதவியானது.

பெயர் காரணம்:

ஆடம் சேட்ஜிவிக் 1835 இக்கால கட்டத்திற்கு கேம்பிரியக் காலம் எனப் பெயரிட்டார். இங்கிலாந்தின் வடக்கு வேலஸ் பாறை அமைப்புகளை கொண்டு இடப்பட்டது.

உயிரினங்கள் :

சிப்பிகள், நத்தைகள் வாழ்ந்தன. நத்தைகளின் புதை படிவங்கள் கேம்பிரியக் காலத்து பாறைகளில் மிகுதியாக உள்ளன. இரண்டு வகை முள்தோலிகள், கடல் அல்லிகள், கைக்காலிகள், பஞ்சுயிரிகள், பவளயுயிரிகள், பாலவகைப் புழுக்கள் வாழ்ந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளது.

பாறை படிவுகள்:

மூன்று வகைகளாக பிரிக்கலாம். நிலவழிப், கரையோரச் சுண்ணாம்புச், ஆழ்கடல். நிலவழிப் படிவுகள், மணல், வண்டல், களியால் உண்டானவை. 300 கி.மி. அகலம், பலநூறு கி.மி. நீளம் கொண்ட சுண்ணாம்புப் பாறை, டோலமைட் பாறைகளாகவும், ஆழ்கடல் படிவுகள் கலிப்பாறைகளாகவும் உள்ளது.

புவிப்பரப்பு:

இரண்டு கண்டங்கள். வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோசீனா, நெருங்கிய நிலப்பரப்பு. அருகில் தென் அமெரிக்காவும் இருந்தது. அனைத்தும் பேஞ்சியா பெருங்கண்டம் என்று பெயர். ஆப்பிரிக்கா, இந்தியாவின் தென் பகுதி, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய நெருக்கமான பகுதிக்கு கொண்டுவானாப் பெருங்கண்டம் என்று பெயர். ஆழமற்ற பெருங்கடல் இருந்தது.

[1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேம்பிரியக்_காலம்&oldid=2764785" இலிருந்து மீள்விக்கப்பட்டது