உள்ளடக்கத்துக்குச் செல்

கலிவிருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கலி விருத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கலிவிருத்தம் தமிழ் பாவினங்களில் ஒன்றான விருத்தத்தின் வகைகளுள் ஒன்று. இது அளவடிகள் (நான்கு சீர்) நான்கு கொண்டு அமையும்; அவற்றில் எதுகை அமைந்திருக்கும். நான்கு அடிகளிலும் சந்த ஒழுங்கு இடம் பெற்றிருக்கும். கலிவிருத்தம் காப்பியங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டு 1

பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல்
நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலான்
மாணநோற் றீண்டிவள் இருந்த வாறெலாம்
காணநோற் றிலனவன் கமலக் கண்களால்

கம்பராமாயணம், சுந்தரகாண்டம் - 402

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிவிருத்தம்&oldid=978236" இலிருந்து மீள்விக்கப்பட்டது