கடற்படுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டத்திட்டினுள் அமைந்த கடற்படுகை ஆழ்கடற்படுகை, ஆழ்கடற் சுரங்கம் என இரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

ஆழ்கடற்படுகை[தொகு]

ஆழ்கடற்படுகை என்பது ஒரு கடலின் கரைப் பகுதியை குறிப்பதாகும். இது கண்டத் திட்டினுள் அமைந்துள்ளது. அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட கடல் ஆய்வுகள் ஆழ்கடற்படுகையில் இப்போது பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் உலோகங்களைவிட பன்மடங்கு உலோகப் படிமங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி அப்படிமங்கள் மாசற்றவனவாகவும் விளங்குகின்றன. எனவே, அவை தோண்டி எடுக்கப்பட்டால் துhய்மைப் படுத்தும் செலவு மிகவும் குறைந்ததாக இருக்கும் என அறிவியலார் கணிப்பு ஒன்று கூறுகிறது.

ஆழ்கடற் சுரங்கம்[தொகு]

ஆழ்கடற்படுகையில் வெட்டப்படும் சுரங்கம் ஆழ்கடற் சுரங்கம் எனப்படும். ஆழ்கடற் சுரங்கத்தின்மூலம் உலோகப் படிமங்களை எடுக்கக்கூடிய திறன் படைத்த நாடுகள் ஒரு சிலவே. திறந்த கடற்பகுதியில் அமைகின்ற ஆழ்கடற் சுரங்கம் எல்லா நாட்டு ஒப்புதல் பெற்று விளங்குவது தேவையாகிறது. ஏனெனில் திறந்த கடற்பகுதியும் அக்கடற்பகுதியின் கீழ் அமைகின்ற கடல்நீரும், நீரில் நின்று நிலவும் உயிரினங்களும், நீரின் கீழ் இருக்கின்ற கடற்படுகையும் எல்லா நாட்டிற்கும் சொந்தமான பொது சொத்தாகும். இதனை பன்னாட்டுப் பொது என்று கூறுவர் பன்னாட்டு சட்ட நுண் அறிவாளர். 1982ல் பன்னாட்டுக் கடற்படை அதிகார ஆயம் என்ற அமைப்பு அனைத்துக் கடற்படுகைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து கடற்படுகை கடற்படுகை அடிமணல் ஆகியவற்றின்மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.


[1]

  1. மேற்கோள் - வாழ்வியற் களஞ்சியம் தொகுதி-6, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்படுகை&oldid=2553268" இருந்து மீள்விக்கப்பட்டது