எஃப் ஏ கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:59, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
எஃப் ஏ கோப்பை
தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள்ITV
ESPN

கால்பந்து கூட்டமைப்பு சவால் கோப்பை, அல்லது பொதுவாக எஃப் ஏ கோப்பை(FA Cup), இங்கிலாந்தில் நடத்தப்பெறும் கோப்பைப் பந்தயமாகும். இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டியாகும். இது போட்டியை நடத்தும் அமைப்பின் பெயரால், அழைக்கப்பெறுகிறது. இது பொதுவாக ஆடவர் போட்டியையே குறிக்கிறது. எனினும் மகளிருக்கும் இதே பெயரில் போட்டி நடைபெறுகிறது.

முதன் முதலாக 1871-72 பருவத்தில் எஃப் ஏ கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் வேல்சு கால்பந்து கூட்டமைப்புகளுக்குள் வரும் அனைத்து கால்பந்து கழகங்களும் பங்குபெறலாம்.

இக்கோப்பையின் தற்போதைய வெற்றியாளர்கள் செல்சீ ஆவர். இவர்கள் 2012 இறுதியாட்டத்தில் லிவர்பூலை 2-1 என்ற கணக்கில் வென்று வாகை சூடினர். இது அவர்களது 7-வது எஃப் ஏ கோப்பையாகும். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஃப்_ஏ_கோப்பை&oldid=1369233" இலிருந்து மீள்விக்கப்பட்டது