இளையராஜா (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளையராஜா என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார். இவர் கும்பகோணம் வட்டம் செம்பியவரம்பல் எனும் கிராமத்தினைச் சேர்ந்தவர்.[1]

கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். 2003 இல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் மிகுந்த கவனம் பெற்றார். 2009 ஆம் ஆண்டு "திராவிடப் பெண்கள் கண்காட்சி" என்ற பெயரில் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் காலரியில் கண்காட்சி நடந்தது. இதில் இளையராவின் ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டன.[1] அந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் விகடன் இதழ்களில் வாங்கி வெளியிட்டப்பட்டன.[1]

திரைத்துறை[தொகு]

இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.[1] அத்திரைப்படத்தில் சிறுவயது பார்த்திபனாகவும் நடித்துள்ளார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் இளையராஜா". www.tamilonline.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையராஜா_(ஓவியர்)&oldid=2758067" இருந்து மீள்விக்கப்பட்டது