இலங்கையில் சுற்றுலாத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை சுற்றுலாத்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கை சுற்றுலாத்துறை இலங்கையின் ஒரு முக்கிய தொழிற்துறை ஆகும். ஒப்பீட்டளவில் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகளை இலங்கை ஈட்க்கிறது. இலங்கையின் நல்ல காலநிலை, இயற்கை அழகு, கடற்கரைகள், வரலாற்று இடங்கள், பண்பாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்கிறது.

சுற்றுலா ஈர்ப்புகள்[தொகு]

நல்லூர்

இலங்கையின் சுற்றுலாத்துறை தெற்கிலும், தெங்கிழக்கிலுமே பெரிதும் வளர்ந்துள்ளது. காலி கடற்கரை, கண்டி மலைப்பகுதி, அனுராதபுர பொலநறுவை வரலாற்று சிறப்பு மிகு இடங்கள், தேசிய பூங்காக்கள், பெளத்த விகாரகைகள் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.

தமிழ் சுற்றுலாப் பயணிகள்[தொகு]

சுற்றுலாப் பயணிகளில் கணிசமான தொகையினர் புகலிடத் தமிழர் ஆவர். பலர் தமது தாயகதைப் பாப்பதற்காக இலங்கை வருகின்றனர். சமாதானக் காலத்தில் தமிழர்கள் பெருந்தொகையாக இப்படி வந்தனர்.

தடங்கல்கள்[தொகு]

ஈழப் போர், சுனாமி அகியவை பயணிகள் வருகையை சற்றுக் குறைத்தாலும், ஒப்பீட்டளவில் அதிக பயணிகள் ஆண்டுதோறும் இலங்கைக்கு வருகின்றனர். புகலிடத் தமிழர் வெவ்வேறு நாடுகளில் இலங்கை செல்ல வேண்டாம் என்று பரப்புரை செய்வதாலும் வருவோர் தொகை சற்று பாதிக்கப்பட்டிருக்கிறது.