இலங்காபிமானி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்காபிமானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இலங்காபிமானி (Ceylon Patriot) என்பது வை. கதிரைவேல்பிள்ளையினால் 1863 ம் ஆண்டு தொடக்கப்பட்ட வார இதழ் ஆகும். இதனை "றிப்ளி அண்ட் ஸ்றோங்" பதிப்பகம் வெளியிட்டது. இதில் கிறித்தவ புரட்டசுதாந்து சமயம் பற்றிய செய்திகளும், பிற செய்திகளும் இடம்பெற்றன.

இந்தப் பத்திரிகை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஆக்கங்களைக் கொண்டிருந்தது. ஆங்கிலப் பெயரே முதற்பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்ததோடு பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலத்தில் அமைந்திருந்ததன. எடுத்துக்காட்டாக 4 பக்கம் வெளியான சந்தர்ப்பங்களில் முதல் 3 பக்கங்கள் ஆங்கிலத்துக்கும் கடைசிப் பக்கம் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த இதழ் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வெளிவந்து 1933 அளவில் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

உசாத்துணைகள்[தொகு]

  • இ. சிவகுருநாதன். (2001). இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி. கொழும்பு: கொழுப்புத் தமிழ்ச் சங்கம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்காபிமானி_(இதழ்)&oldid=2786973" இருந்து மீள்விக்கப்பட்டது