மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இணைப்பு நிஜமாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை

நிஜத்தில் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், நிகழ் நேரத்தில் இணைக்கும் நுட்ப அமைப்பை மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை (Augmented Reality) எனலாம். இந்த நுட்ப அமைப்புக்கு கணினியியல் தொழில் நுட்பங்களே அடிப்படை. மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை அமைப்புக்கு மூன்று அம்சங்கள் அவசியமாக கருதப்படுகின்றது, அவை:

  1. தலையில் அணியக்கூடிய காட்சி சாதனம்
  2. நிகழ் நேர தட தொடரி
  3. நடமாடும் கணிமை வசதி

மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மைப் பயன்பாடுகள்[தொகு]

  • ஒரு பொருளை திருத்தும்பொழுது நிகழ்நேரத்தில் பொருட்களை அடையாளங்காட்டி, செய்முறைகளை அறிவித்து வழிகாட்ட உதவுதல்
  • அறுவைச் சிகிச்சை உதவி
  • தொலைக்காட்சி மேலதிக தகவல்களை இணைத்தல்
  • நிகழ்நேர வீதி வரைபட வழிகாட்டல்
  • விளையாட்டுக்கள், பொழுதுபோக்குக்கள்

வெளி இணைப்புகள்[தொகு]