உள்ளடக்கத்துக்குச் செல்

அம்போதரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அம்போதரங்கம் (யாப்பிலக்கணம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்போதரங்கம் என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஒரு உறுப்பாகும். இது அப் பாவகையில் தரவு, தாழிசை, அராகம் என்னும் உறுப்புகளைத் தொடர்ந்து நான்காவது உறுப்பாக வரும்.

அம்பு = தண்ணீர் ; தரங்கம் = அலை. நீரில் அடிக்கும் அலை பெரிதாகத் தொடங்கித் தேய்ந்து கரையோரத்தில் சேரும் போது சுருங்கி முடியும். அது போல நாற்சீரடி, முச்சீரடி, இருசீரடி என அடுத்தடுத்து வரும் உறுப்பு அம்போதரங்கம் எனப்பட்டது. இதற்குச் சொற்சீரடி (ஒரு சொல்லே ஒரு சீராக வருவதால்), அசையடி (ஓர் அசையே சீராக வரும் அடிகள் கொண்டிருப்பதால்) என்ற வேறு பெயர்களும் உண்டு. சீர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதால் ”எண்” எனும் பெயரும் உண்டு.

எடுத்துக்காட்டு

[தொகு]

வாட்போக்கி கலம்பகத்தில் வரும் பின்வரும் வரிகள் அம்போதரங்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன


1. துருவொரு தயையினைந் தொழிலி யற்றியு

மருவொரு தொழிலுமில் லாத மாட்சியை;

2. பெண்ணொரு பாலுறு பெற்றி மேவியு

மெண்ணொரு விகாரமு மிலாத காட்சியை.

(இவை இரண்டும் நாற்சீரடி அம்போதரங்கம்.)

  1. உள்ளொளி யாகிந்ன் றுணர்த்துந் தன்மையை;
  2. வெள்ளொளி விடைமிசை விளங்கு நன்மையை;
  3. அம்புல நடுப்புகுந் தாடுங் கூத்தினை;
  4. நம்பல மெனப்பலர் நவிலுஞ் சோத்தினை.

(இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்.)

  1. சடைநெடு முடியமர் செல்லினை;
  2. தவமுயல் பவர்வினை கல்லினை;
  3. கடையரு வடவரை வில்லினை;
  4. கவினுற நெடுமறை சொல்லினை;
  5. மிடைவலி யினர்தரு பல்லினை;
  6. விசயனொ டெதிர்பொரு மல்லினை;
  7. அடைதரு மிடையதள் புல்லினை;
  8. அளவிட லரியதொ ரெல்லினை;

(இவை எட்டும் முச்சீரடி அம்போதரங்கம்.)

  1. அருள் கொடுத்தனை;
  2. இருள் கொடுத்தனை;
  3. ஆல மாந்தினை;
  4. சூல மேந்தினை;
  5. இசைவி ரித்தனை;
  6. வசையி ரித்தனை;
  7. எங்கு நீடினை;
  8. சங்கு சூடினை;
  9. மதிய ணிந்தனை;
  10. கொதித ணிந்தனை;
  11. மழுவ லத்தினை;
  12. தொழுந லத்தினை;
  13. பொருவி றந்தனை;
  14. கருவ றந்தனை;
  15. பொய்யி னீங்கினை;
  16. மெய்யி னோங்கினை.

(இவை பதினாறும் இருசீரோரடி அம்போதரங்கம்.)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்போதரங்கம்&oldid=3299259" இலிருந்து மீள்விக்கப்பட்டது