அனோ டொமினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
106.198.3.86 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 03:45, 9 திசம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (I think it is 8th century , not 800th century)
டயொனிசியஸ் எக்சிகுஸ் அனோ டொமினி ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.

அனொ டொமினி (இலத்தீன்: Anno Domini) என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும். இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும்[1], 'நமது கடவுளின் ஆண்டு' [2][3] என்றும் பொருள்பட வழங்கப்பட்டது.

இதன் தமிழாக்கம் கிறிஸ்த்துவுக்கு பின் என்பதனால், கி.பி. அல்லது கிபி என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525 ம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ) காலம் கிறிஸ்த்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. அல்லது கிமு எனத் தமிழில் வழங்கப்படுகிறது.

அனொ டொமினி முறை கிபி 525 இல் பகுக்கப்பட்டாலும், கி.பி.8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பயன்படுத்தப்படவில்லை.[4]

மேற்கோள்கள்

  1. "Anno Domini". Merriam Webster Online Dictionary. (2003). Merriam-Webster. அணுகப்பட்டது 2011-10-04. “Etymology: Medieval Latin, in the year of the Lord” 
  2. "Online Etymology Dictionary". பார்க்கப்பட்ட நாள் 2011-10-04.
  3. Blackburn & Holford-Strevens 2003, ப. 782 "since AD stands for anno Domini, 'in the year of (Our) Lord'."
  4. Dick Teresi (July 1997). "Zero". The Atlantic. http://www.theatlantic.com/past/docs/issues/97jul/zero.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனோ_டொமினி&oldid=2611111" இலிருந்து மீள்விக்கப்பட்டது