வெஞ்சுண்ணக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டிராவர்ட்டைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மம்மது வெந்நீர் உற்ரில் அமைந்த சுண்ணக்க்ல கூரை, மஞ்சட்கல் தேசியப் பூங்கா, 2016
நன்னீரில் தாழ் வெப்பநிலயில் சுண்ணக்கல் முகட்டுடன் பாசடையில் வளர்தல்(நாணயம் அளவைக் காட்ட)

வெஞ்சுண்ணக்கல் (Travertine) (/ˈtrævərˌtn/[1] TRAV-ər-teen) என்பது வெந்நிர் ஊற்றுகளில் படியும் புவிச் சுண்ணக்கல் வடிவமாகும். இது நாரிழை அல்லது இணைமையத் தோற்றம் கொண்டுள்ளது. இது துரு, குழைவை, வெண்மை, எனப் பலவகை நிறங்களில் நிலவுகிறது.[2][3]இது வெந்நிர் ஊற்றுவாய் அருகிலோ அல்லது சுண்ணாம்புக்கல் குகையிலோ வேகமாகக் கால்சியம் கார்பனேட்டு படிவதால் உருவாகிறது. பின்னர் இது சுட்டாலக்டைட்டாகவோ சுட்டாலக்மைட்டாகவோ பிற சுண்ணக்கல் வகைகளாகவோ மாறலாம். இது இத்தாலியிலும் மேலும் சில இடங்களிலும் கட்டிடப்பொர்ட்களாகப் பயன்படுகிறது. சூழல் வெப்பநிலையில் நன்னீரில் உருவாகும் இதையொத்த, ஆனால் மேலும் மென்மையும் புரையும் உள்ள படிவுகள் மென்சுண்ணக்கல்(துஃபா) எனப்படுகின்றன.

இக்கனிமம் ஸ்டாலக் டைட் சுண்ணாம்புப் பாறைக் குகைகளின் அடித்தளத்திலிருந்து எறும்புப் புற்று போல் மேல் நோக்கி வரும் பாறைகளைப் போன்ற உருவாக்கத்தைப் பெற்றுள்ளது. இவற்றிற்கு வேண்டிய சுண்ணாம்புப் பொருள் நீரூற்று நீரிலிருந்து உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.

இருப்பிடம்[தொகு]

உரோம் நகரத்திற்கு அருகிலுள்ள டிவோலி நகரின் ஆனியோ ஆற்றுப் பகுதியில் எடை மிகுந்த பாறையாகக் காணப்படுகிறது. இவ்வகைக் கனிமம் அந்நாட்டில் மஞ்சள் கல் பூங்காவில் உள்ள வெந்நீர் ஊற்றைச் சுற்றி மிகுதியாகக் கிடைக்கிறது. இத்தாலியிலுள்ள மட்லாக், நரேஸ்ப்பாரோ பகுதியில் உள்ள ஊற்றுகளிலிருந்து இவ்வகைக் கரைசல்கள் வெளிவரும்போது அந்த ஊற்றுப் பகுதியினுள் குச்சி, பறவைக்கூடு போன்றவை விழுந்தவுடன் அவற்றைச் சுற்றி இக்கனிமச் சுண்ணாம்பு படிவு இறுகிய கடினமான பாறை போன்ற பூச்சாக உருவாகிறது. சிறிது சிறிதாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக உருவாகித் தடித்த பாறைப் படிவுகளாகக் கண்ணப்படும். இந்நிலையில் இவற்றை மென்சுண்ணக்கல் என்பர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Travertine – Definition for English-Language Learners from Merriam-Webster's Learner's Dictionary". learnersdictionary.com. Archived from the original on 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  2. Jackson, Julia A., தொகுப்பாசிரியர் (1997). "travertine". Glossary of geology. (Fourth ). Alexandria, Virginia: American Geological Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0922152349. https://archive.org/details/glossaryofgeolog0000unse_k9a5. 
  3. Monroe, W.H. (1970). "A glossary of Karst terminology". U.S. Geological Survey Water-Supply Paper 1899-K. doi:10.3133/wsp1899K. 
  4. "டிராவா்ட்டைன்". அறிவியல் களஞ்சியம் தொகுதி 11. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 8 சூலை 2017. 

தகவல் வாயில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Travertine
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெஞ்சுண்ணக்கல்&oldid=3778044" இலிருந்து மீள்விக்கப்பட்டது