புளிங்காடி
Appearance
(வினிகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புளிங்காடி (vinegar) என்பது எத்தனால் என்னும் நீர்மத்தை நொதிக்க வைப்பதின் மூலம் உருவாக்கப்படும் நீர்மப் பொருள். இதின் முக்கிய உட்பொருளான எத்தனாயிக் காடி (மற்றொரு பெயர் : அசிட்டிக் காடி), 4 முதல் 8 விழுக்காடு வரை நீர்த்த நிலையில் காணப்படுகிறது. பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்க விடுவதன் மூலமும் இது கிடைக்கும். ஊறுகாய் போன்றவற்றை கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் புளிங்காடியில் இக்காடி 18 சதவீதம் வரை காணப்படுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் புளிங்காடியில் சிறிய அளவில் டார்ட்டாரிக் காடி (அமிலம்), நரந்தக் காடி (அமிலம்), மற்றும் வேறு சில காடிகளும் காணப்படுகின்றன. பண்டைய காலம் தொட்டே புளிங்காடி உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Acetic acid: general information". GOV.UK (in ஆங்கிலம்). Government Digital Service. பார்க்கப்பட்ட நாள் 19 March 2024.
- ↑ Nakayama, Takeyoshi (September 1959). "Studies on acetic acid-bacteria I. Biochemical studies on ethanol oxidation". The Journal of Biochemistry 46 (9): 1217–1225. doi:10.1093/oxfordjournals.jbchem.a127022.
- ↑ "Definition of vinegar in English by Oxford Dictionaries". Oxford Dictionaries. Archived from the original on 20 March 2018.