புறணி விளைவு
Appearance
(மின் புறவோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒரு மின் கடத்தியில், நேர்மின்னோட்டம் நடக்கும் பொழுது, அக்கடத்தியின் உள்ளே, அதன் குறுக்கு வெட்டுப் பரப்பில், எல்லா இடங்களிலும், ஒரே சீராக ஒரே அளவு மின்னோட்டம் தான் இருக்கும். ஆனால், மின்னோட்டம் மாறு மின்னோட்டமாக இருந்தால், மிக அதிக அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் நிகழும் பொழுது, மின்னோட்டம் பெரும்பாலும் அந்த மின் கடத்தியின் மேற்புறத்திலேயே நிகழும்; கடத்தியின் அச்சு போன்ற உட்பகுதியில், அதிக மின்னோட்டம் இராது. இப்படி ஒரு கடத்தியின் (அச்சு போன்ற) உட்பகுதியிலே மின்னோட்டம் நிகழாது, புறப்பகுதியில் அதிகமாக மின்னொட்டம் நிகழ்வதை புறணி விளைவு (skin effect) என அழைக்கிறார்கள்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lamb, Horace (1883-01-01). "XIII. On electrical motions in a spherical conductor". Philosophical Transactions of the Royal Society of London 174: 519–549. doi:10.1098/rstl.1883.0013.
- ↑ Fink, Donald G.; Beaty, H. Wayne (2000). Standard Handbook for Electrical Engineers (14th ed.). McGraw-Hill. pp. 2–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-022005-8.
These emf's are greater at the center than at the circumference, so the potential difference tends to establish currents that oppose the current at the center and assist it at the circumference.
- ↑ Johnson, Howard; Graham, Martin (2003). High-Speed Signal propagation Advanced Black Magic (3rd ed.). Prentice Hall. pp. 58–78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-084408-8.
To understand skin effect, you must first understand how eddy currents operate ...