பெண்கள் வரலாற்று மாதம்
Appearance
பெண்கள் வரலாற்று மாதம் என்பது வரலாற்றில் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் சமூகத்திற்கான பெண்களின் பங்களிப்புகளைக் குறித்துக்காட்டி ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாதம் ஆகும். மார்ச்சு 8 பெண்கள் நாளை ஒட்டி ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம்(UK), ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளில் மார்ச்சு மாதத்தில் கொண்டாடப்படுகிறது. கனடாவில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் மதிக்கப்பட்டு சம உரிமை வழங்கப்பட்ட நாளான (Persons Day) அக்டோபர் 18 ஐ ஒட்டி, அக்டோபர் மாதத்திலும் கொண்டாடப்படுகிறது.[1]
அண்மையத் தாக்கம்
[தொகு]பெண்களின் பங்களிப்பைப் பலரும் உணர்ந்து வருவதால், உலகின் பல இடங்களுக்குப் பெண்கள் வரலாற்றுக் கொண்டாட்டங்கள் பரவி வருகின்றன.
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "பெண்கள் வரலாற்று மாதம்". பெண்கள் கனடாவின் நிலை. கனடா அரசு. October 3, 2011. Archived from the original on மார்ச் 14, 2012. பார்க்கப்பட்ட நாள் March 3, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)