பழச் சாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆரஞ்சுப் பழச்சாறு

பழச் சாறு பழங்களைப் பிழிந்து பெறப்படும் சாறு ஆகும். வெப்பம் போன்றவற்றைப் பாவிக்காமல் பிழிவதனால் மட்டும் பழங்களில் இயற்கையாக உள்ள சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது. காய்கறிகளிலிருந்தும் இவ்வாறு சாறு பிழியப்படுகிறது. பழச்சாறு வீடுகளிலும் தொழில்முறையாகவும் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள், ஒறேஞ் (ஆரஞ்சு), அன்னாசி, எலுமிச்சை (இலங்கை வழக்கு: தேசி), கரட், தக்காளி போன்ற பலவற்றிலிருந்து சாறு பிழியப்படுகிறது. பல பழச்சாறுகள் கலக்கப்படும் முறை இப்பொழுது பரவலாக உள்ளது. பழச்சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகும். ஆனால் பழங்களை உண்ணுமளவு பயன் பழச்சாறு அருந்துவதால் கிடைக்குமென்று கூற முடியாது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பழச்_சாறு&oldid=1348498" இருந்து மீள்விக்கப்பட்டது