பனிக்கட்டி வாளி அறைகூவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிக்கட்டி வாளி அறைகூவலை நிறைவேற்றுமொருவர்

பனிக்கட்டி வாளி அறைகூவல் (Ice Bucket Challenge) என்பது தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய்க்கான ஆராய்ச்சியில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட மேற்கொள்ளப்பட்ட அறைகூவல் ஆகும். இந்த அறைகூவலை எதிர் கொள்பவர் ஒரு வாளி குளிர்ந்த நீரை தனது தலையில் ஊற்றிக் கொள்ளவோ அல்லது அத்தொண்டு நிறுவனத்திற்கு $100 நிதியோ அல்லது இரண்டையுமே இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் செய்யவோ தன் நண்பர்களால் அறைகூவல் விடப்படுவார். 2014 ஆம் ஆண்டின் நடுவில் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக இந்தச் அறைகூவல் பற்றிய செய்தி பரவியது.[1][2] உலகம் முழுவதும் உள்ள பலரும் இந்த அறைகூவலில் பங்கேற்றனர்.

பின்னணி[தொகு]

தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் (Amyotrophic lateral sclerosis - ALS) எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் பனிக்கட்டி வாளி அறைகூவல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் அறைகூவலை உலக பிரபலங்களில் பலர் ஏற்றுத் தங்கள் தலையில் ஒரு வாளி குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர். மேலும் இந்தச் சவாலை ஏற்கும் ஒவ்வொருவரும் 3 பேரை முன்மொழிந்து அவர்களையும் இந்தச் அறைகூவலை ஏற்குமாறு கூற வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lost Coast Of New Zealand (2014-07-09). "Charities benefit from viral ice challenge - National News". TVNZ. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.
  2. "News". Cancer Society Auckland. Archived from the original on 2015-03-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.