நேபாள அரசுப் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நேபாள அரசுப் படுகொலைகள்
இடம் நாராயண்ஹிதி அரசு அரண்மனை, கத்மந்து, நேபாளம்
நாள் ஜூன் 1, 2001
21:00 (UTC+5:45)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
நேபாள அரசு வம்சம்
பிரேந்திரா
தாக்குதல்
வகை
படுகொலை
தந்தையார் கொலை
தற்கொலைத் தாக்குதல்
இறப்பு(கள்) 10 (சுட்டவர் உள்ளிட்ட)
காயமடைந்தோர் 5
தாக்கியோர் இளவரசர் திபேந்திரா

நேபாள அரசுப் படுகொலைகள் 2001இல் ஜூன் 1ஆம் திகதி நேபாளத்தின் தலைநகரம் கத்மந்துவில் அமைந்த நாராயண்ஹிதி அரசு அரண்மனையில் நடந்தன. ஒரு அரசு விருந்து நடக்கும்பொழுது நேபாள மன்னர் பிரேந்திராவின் மகன் இளவரசர் திபேந்திரா சாராயத்தை குடித்துவிட்டு துப்பாக்கியால் விருந்தில் இருந்த மக்களை சுட்டார். திபேந்திராவின் தந்தையார் மன்னர் பிரேந்திரா, அவரின் தாய் அரசி ஐஸ்வரியா உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிறகு திபேந்திரா தன்னைத் தானே சுட்டு நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார்.

இந்த கடும் நிகழ்வு காரணமாக பிரேந்திராவின் இளைய சகோதரர் இளவரசர் ஞானேந்திரா பதவிக்கு வந்தார். ஞாநேந்திரா காரணமாக தான் இப்படுகொலை நடந்தது என்று சில நேபாள பொதுமக்கள் நம்புகின்றனர், ஆனால் இக்கொலைக்கான முழுக் காரணம் இன்று வரை அறியப்படவில்லை. என்றாலும் இளவரசர் தீபேந்திரா தனது காதலியான தேவயானி ராணாவை திருமணம் புரிவதில் அவரது தாயாருடன் ஏற்பட்ட பிணக்கே காரணம் என நம்பப்படுகிறது.