நர்மதைப் புனித நீராடும் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நர்மதா புஷ்கரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நர்மதைப் புனித நீராடும் விழா
Narmada Pushkaram
நிகழ்நிலைநடப்பில்
வகைஇந்து சமய விழா
காலப்பகுதி12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
அமைவிடம்(கள்)நருமதை
நாடுஇந்தியா
மிக அண்மையமே 2012
அடுத்த நிகழ்வுஏப்ரல் 22 - மே 5, 2024
பரப்புவட இந்தியா
செயல்பாடுபுனித நீராடல்

நர்மதைப் புனித நீராடும் விழா (நர்மதா புஷ்கரம்) நர்மதை ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

12 நாள்கள்[தொகு]

குரு ரிஷப ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [1]

அமர்கந்தக் கோயில், ஓங்காரேஸ்வரர் கோயில், சௌஷாத் யோகினி கோயில் (ஜபல்பூர்), சௌபீஸ் அவதாரக்கோயில், மகேஸ்வரர் கோயில் (நேமவார்), சித்தேஸ்வரர் கோயில், மற்றும் போஜேஸ்வரர் கோயில் (போஜ்பூர்) ஆகிய கோயில்கள் பழமையும் பெருமையும் வாய்ந்தவை. 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஓங்காரேஸ்வரர் கோயிலும், அம்ரார்கந்தும் நர்மதை ஆற்றில் புனித நீராட மிகச் சிறந்த இடங்களாகும்.

பிற புஷ்கரங்கள்[தொகு]

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம் , சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம் , கோதாவரி புஷ்கரம் , கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Roshen Dalal (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. pp. 921–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.