தனித்த பகுதி (அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தனித்தப் பகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தனித்தப் பகுதிகள் (insular area) எனப்படுவன ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஐம்பது மாநிலங்களிலோ அமெரிக்க கூட்டரசு மாவட்டம் வாசிங்டன், டி. சி.யிலோ இல்லாத அமெரிக்க நிலப்பகுதிகள் ஆகும்.[1] இவை இலத்தீன் சொல்லான இன்சுலா ("தீவு") என்பதைக் கொண்டு ஆங்கில மொழியில் "இன்சுலர்" பகுதிகள் என அங்கு குறிப்பிடப்படுகின்றன. இவை ஒருகாலத்தில் போர்ப் பிரிவின் தனித்தப்பகுதி விவகாரத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்தன; இன்று கூட்டரசின் உள்துறையின் கீழ் தனித்தப் பகுதிகள் விவகார அலுவலகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Definitions of Insular Area Political Organizations". Office of Insular Affairs. U.S. Department of the Interior. 2007-01-11. Archived from the original on 2012-09-25. பார்க்கப்பட்ட நாள் 2008-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனித்த_பகுதி_(அமெரிக்கா)&oldid=3575370" இலிருந்து மீள்விக்கப்பட்டது