செல்லியம்மன் கோயில், அகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்லியம்மன் கோயில் என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள அகரம் என்னும் ஊரில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளது. [1]

கோயிலின் சிறப்பு[தொகு]

இக்கோயில் கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இன்று வரை இக்கோயிலை பல்வேறுபட்ட மக்கள் வணங்கி வருகின்றனர் . இக்கோயிலுக்கு குடும்பம் குடும்பமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மக்கள் வந்து போவது வழக்கம், அது மட்டும் இன்றி ஆடி வெள்ளிக்கிழமைகளில் மக்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூசை செய்து வழிபடுவார்கள்.

மேற்கோள்[தொகு]