சார்லஸ் டி கோல்
| சார்லஸ் டி கோல் | |
|
|
|
|---|---|
| பதவியில் 18 ஜூன் 1940 – 3 ஜூலை 1944 |
|
| முன்னவர் | மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசு |
| பின்வந்தவர் | பிரெஞ்சுக் குடியரசின் இடைக்கால அரசு |
|
|
|
| பதவியில் 3 ஜூலை 1944 – 20 ஜனவரி 1946 |
|
| குடியரசுத் தலைவர் | ரெனே கோட்டி |
| முன்னவர் | பிலிப்பே Pétain (நாட்டுத் தலைவர்) பியரே லாவல் (பிரதமர்) |
| பின்வந்தவர் | Felix Gouin |
|
|
|
| பதவியில் 1 ஜூன் 1958 – 8 ஜனவரி 1959 |
|
| தலைவர் | ரெனே கோட்டி |
| முன்னவர் | Pierre Pflimlin |
| பின்வந்தவர் | Michel Debré |
|
|
|
| பதவியில் 1 ஜூன் 1958 – 8 ஜனவரி 1959 |
|
| President | ரெனே கோட்டி |
| Prime Minister | சார்லஸ் டி கோல் |
| முன்னவர் | Pierre de Chevigné |
| பின்வந்தவர் | Pierre Guillaumat |
|
|
|
| பதவியில் 8 ஜனவரி 1959 – 28 ஏப்ரல் 1969 |
|
| Prime Minister | Michel Debré (1959-1961) ஜார்ஜ் பொம்பிடூ (1962-1968) Maurice Couve de Murville (1968-1969) |
| முன்னவர் | René Coty |
| பின்வந்தவர் | ஜார்ஜ் பொம்பிடூ |
| அரசியல் கட்சி | குடியரசுக்கான சனநாயகவாதிகள் ஒன்றியம் |
|
|
|
| பிறப்பு | நவம்பர் 22, 1890 Lille |
| இறப்பு | நவம்பர் 9 1970 (அகவை 79) Colombey-les-Deux-Églises |
| வாழ்க்கைத் துணை |
Yvonne de Gaulle |
| தொழில் | படைத்துறை |
| சமயம் | உரோமன் கத்தோலிக்கர் |
சார்லஸ் டி கோல் எனப் பரவலாக அறியப்படும் சார்லஸ் அண்ட்ரே ஜோசெப் மாரீ டி கோல் (Charles André Joseph Marie de Gaulle - 22 நவம்பர் 1890 – 9 நவம்பர் 1970) பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது சுதந்திர பிரான்ஸ் படைகளுக்கு இவர் தலைமை தாங்கினார். பின்னர் ஐந்தாம் பிரெஞ்சுக் குடியரசை நிறுவிய இவர் அதன் முதல் அதிபராகவும் பணியாற்றினார். இவர் ஜெனரல் டி கோல் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
முதலாம் உலகப் போர்ப் பட்டறிவும் கொண்ட இவர், 1920களிலும், 1930களிலும் கவசவண்டிப் போர்முறையின் ஆதரவாளராகவும், படைத்துறையில் வானூர்திகளைப் பயன்படுத்துவதன் ஆதரவாளராகவும் முன்னணிக்கு வந்தார். பதுங்குகுழிப் போர்களில் ஏற்படக்கூடிய இழுபறி நிலையைப் போக்குவதற்கு இதுவே வழி என அவர் கருதினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இவர் பிரிகேடியர் ஜெனரல் என்னும் தரநிலைக்கு உயர்ந்தார். 1940 ஆம் ஆண்டின் பிரான்ஸ் வீழ்ச்சியின் போது இடம்பெற்ற போர்களில் சில வெற்றிகரமான எதிர்த் தாக்குதல்களை நடத்திய படைகளை இவர் வழி நடத்தினார். பின்னர் இங்கிலாந்தில் நாடுகடந்து வாழ்ந்த பிரான்ஸ் படையினரை ஒன்று சேர்த்து, "சுதந்திர பிரெஞ்சுப் படையை" அமைத்தார். நாசி ஜேர்மனியை எதிர்க்குமாறு பிரான்ஸ் நாட்டினரைக் கோரி 1940 ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய வானொலிப் பேச்சு மிகவும் புகழ் பெற்றது. 1944 ஆம் ஆண்டில் பிரான்சை மீட்ட பின், உருவான பிரான்ஸ் இடைக்கால அரசில் இவர் பிரதமர் ஆனார். அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1946 ஆம் ஆண்டில் அவர் அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். 1958 மேயில் உருவான நெருக்கடியைத் தொடர்ந்து படையினரின் துணையோடு இவர் மீண்டும் பதவியில் அமர்ந்தார். டி கோல், ஐந்தாம் குடியரசை நிறுவுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதை வழி நடத்திப் பின்னர் பிரான்சின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
| விக்கி ஊடக நடுவத்தில் சார்லஸ் டி கோல் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |