சனீசுவரன் ஆலயம் திருகோணமலை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சனீசுவரன் ஆலயம் திருகோணமலை | |
---|---|
சனீசுவரன் ஆலயம் | |
ஆள்கூறுகள்: | 8°34′54.85″N 81°13′40.09″E / 8.5819028°N 81.2278028°E |
பெயர் | |
பெயர்: | சனீசுவரன் ஆலயம் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | கிழக்கு மாகாணம் |
மாவட்டம்: | திருக்கோணமலை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சனீஸ்வரன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
சனீசுவரன் ஆலயம் இலங்கை, திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் பிரதேசத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.
வழமையாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விசேட வழிபாடு நடைபெறும். இவ்வாலயத்தில் புரட்டாதி மாதத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் புரட்டாதிச் சனீஸ்வர விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்படும். இவ்வாலய தலவிருட்சமாக தாண்டி மரம் கொள்ளப்படுகிறது.
திருகோணமலையில் நிறைய ஆலயங்கள் இருந்தாலும் சனீஸ்வரனுக்குத் தனியாக அமைக்கப்பட்டிருக்கும் ஆலயம் இதுவொன்றுதான். இலங்கையிலுள்ள ஒரேயொரு சனீவரன் ஆலயம் இதுவெனக் கருதப்படுகிறது. இந்தியாவில் சனீஸ்வரனை பிரத்தியோகமாக வழிபடும் தலம் திருநள்ளாறு. நளன் சனிபகவானிடமிருந்து விடுபட்ட இடமாக கருதப்படும் இங்கு சனீஸ்வரனுக்குத் தனியான சன்னிதி உண்டு.