விக்கியூடக இந்தியப் பிரிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய விக்கியூடகப் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய விக்கியூடகப் பிரிவு (Wikimedia India Chapter; விக்கிமீடியா இந்தியா) என்பது இந்தியாவில் விக்கியூடக அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட அமைப்பு. 2004 இது பற்றிய உரையாடல்கள் தொடங்கப்பட்டது எனினும் தொடர் செயற்பாடுகள் நடைபெறவில்லை. 2007 மீண்டும் புத்துயிர்ப்பு தரப்பட்டாலும், அமைப்பு நிறுவப்படவில்லை. 2009 இல் சென்னை விக்கிப்பீடியா அறிவகம் இந்திய விக்கியூடகப் பிரிவை தொடங்குவதில் முனைப்பு காட்டுகிறது.[1] 2011 சனவரியில் இம்முயற்சிகள் வெற்றி பெற்று பெங்களூரில், இலாப நோக்கற்ற அமைப்பாகக் பதிவு செய்யப்பட்டது
பொருளடக்கம் |
[தொகு] நிர்வாகக் குழு
அநிருத் சிங் பாட்டி, அர்ஜுனா ராவ் சாவ்லா, அருண் ராமரத்னம், டினு செரியன், நவீன் ஃபிரான்சிஸ், சுதன்வா ஜோக்லேக்கர் மற்றும் ஸ்ரீநிவாஸ் குந்தா ஆகியோர் அடங்கிய ஏழு நபர் நிர்வாகக் குழு இந்திய விக்கிமீடியா பிரிவினை நிர்வகிக்கிறது.