வலைவழிக் கொள்முதல்
Appearance
(இணையக் கொள்முதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இணையக் கொள்முதல் அல்லது வலைவழிக் கொள்முதல் (Online Shopping) என்பது வலைத்தளம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதாகும். இன்று எல்லாதரப்பட்ட பொருட்களையும் இணையத்தில் வாங்கலாம். இந்த வலைத்தளங்கள் தாங்கள் விற்கும் பொருட்களை காட்சிசெய்து, பொருட்கூடை மென்பொருளைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் கொள்முதல் விபரங்களை ஒழுங்கு செய்யும். இறுதியாக காச அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். பொருட்கள் வீட்டுக்கும் தபால் மூலம் அனுப்பப்படும். இணையக் கடையை முன்னோடிகளில் ஒன்று அமேசான்.காம் ஆகும். முதலில் நூல்களை விக்க தொடங்கி, இன்று எல்லா விதமான பொருட்களையும் விற்கிறது. இன்னுமொரு சிறந்த எடுத்துக்காட்டு கணினிகளை விற்கும் டெல் நிறுவனமாகும்.