இசை நாற்காலிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசை நாற்காலிகள் (musical chairs) என்பது பொதுவாக குழந்தைகளால் விளையாடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது பிறந்த நாள் விழா போன்ற சமயங்களில் முற்றிலும் கேளிக்கைக்காக விளையாடப்படும். இவ்விளையாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்களோ அந்த எண்ணிக்கையில் ஒன்று குறைவாக நாற்காலிகள் வட்ட வடிவில் அமைக்கப்படும். பின்னணியில் இசை ஒலிக்க விளையாடுவோர் நாற்காலிகளை வட்டமடிக்க வேண்டும். இசை நின்ற உடனே விரைவாக நாற்காலியில் அமர வேண்டும். நாற்காலி கிடைக்காத ஒருவர் ஆட்டத்தை விட்டு வெளியேறுவார். ஒரு நாற்காலி எடுக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடரும். கடைசியாக ஒரு நாற்காலிக்காக இருவர் விளையாடுவர். அவர்களுள் ஒருவர் வெற்றி பெறுவர்.